'சிறை' படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.‘சிறை’ படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
'சிறை' படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Published on

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சிறை'. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.

நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.

'சிறை' படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் 'சிறை' படம் வெளியான 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில், 'சிறை' படம் முதல் நாளிலேயே உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது என்றும் இதனால் 2 நாட்களில் ரூ.2 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com