என் மலர்
நீங்கள் தேடியது "பாடகி சின்மயி"
- சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
- பாடகி சின்மயி 500 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் உடன் போராட்டக்களத்திற்கு வந்தார்.
சென்னை மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 6 ஆவது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நகரின் பல இடங்களில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
ரிப்பன் மாளிகையின் முன்னால் போராடிக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு அவசரமாக தண்ணீர் தேவைப்பட்ட நிலையில், பாடகி சின்மயி 500 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் உடன் போராட்டக்களத்திற்கு வந்தார்.
தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், தங்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் என்ற தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு சின்மயி ஆதரவு தெரிவித்தார்
- நேற்று இரவு 1.2 லட்சம் ஆணுறை பாக்கெட்டுகள் டெலிவரி செய்யப்பட்டதாக Blinkit CEO பதிவிட்டுள்ளார்.
- ஆண்கள் பெண்களுடன் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதை நிறுத்த வேண்டும்.
பிரபல பாடகி சின்மயி எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பதிவிட்ட பதிவிற்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
அந்த எக்ஸ் பதிவில், "நேற்று இரவு 1.2 லட்சம் ஆணுறை பாக்கெட்டுகள் டெலிவரி செய்யப்பட்டதாக Blinkit CEO பதிவிட்டுள்ளார். நேற்று இரவில் பிளிங்கிட்டில் மட்டும். 1.2 லட்சம் மற்ற இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் சந்தையில் 1 கோடி ஆணுறை பாக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கும். இந்த தலைமுறையில் கன்னிப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது அதிர்ஷ்டம் ஆகும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
இந்த எக்ஸ் பதிவை சின்மயி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஆண்கள் பெண்களுடன் உடலுறவு கொள்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு கன்னிப் பெண்கள் வேண்டும் என்று கூறுகிறார்கள்.
ஆடு, நாய் மற்றும் ஊர்வனவற்றுடன் உடலுறவு கொள்வதற்கு ஆணுறைகளை வாங்கும் வரையில், ஆண்கள் பெண்களுடன் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதை நிறுத்த வேண்டும். மேலும் உங்கள் சகோதரர்கள் மற்றும் ஆண் நண்பர்களிடம் திருமணம் வரை உடலுறவு கொள்ள வேண்டாம் என்று சொல்லுங்கள்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.






