என் மலர்
நீங்கள் தேடியது "பிகினி"
- சாய் பல்லவியும் அவரது தங்கை பூஜா கண்ணனும் ஒன்றாக சுற்றுலா சென்றுள்ளனர்.
- பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பூஜா கண்ணன் பகிர்ந்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'அமரன்'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து இருந்தார். இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.
இதையடுத்து தெலுங்கில் நாகசைதன்யாவுடன் 'தண்டேல்' படத்தில் நடித்து இருந்தார். தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள ராமாயனா படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்தில் சீதா கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கிறார்.
இந்நிலையில், சாய் பல்லவியும் அவரது தங்கை பூஜா கண்ணனும் ஒன்றாக சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது கடற்கரையில் இருவரும் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவின. ராமாயண படத்தில் சீதாவாக நடிக்கும் சாய் பல்லவி பிகினி உடையில் புகைப்படங்கள் வெளியிடலாமா? என்று வட இந்தியாவில் சிலர் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே சமயம் ஒருவர் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவரவர் விருப்பம் என்று சாய் பல்லவிக்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு நடிகை வேதிகா வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், தற்போது சாய் பல்லவியின் பிகினி புகைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களின் மோகம் நாளுக்கு நாள் இளைஞர்களிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
- சமீபத்தில் நடிகை மற்றும் இன்ஸ்டா பிரபலமான தர்ஷா குப்தாவின் புகைப்படம் வைரலானது.
இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களின் மோகம் நாளுக்கு நாள் இளைஞர்களிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமூக வலைத்தளத்தில் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படத்திற்கு எத்தனை லைக், ஷேர் , கமெண்ட்ஸ் வருகிறது என்பதே இளைஞர்களின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது.
பலர் இந்த செயலியின் மூலம் பிரபலமாகி சினிமாத்துறையில் நடித்துள்ளனர். சில இன்ஸ்டாகிராம் மாடல் மற்றும் Influencers அவர்களது அந்தரங்க புகைப்படங்களை சப்ஸ்கிரைப் செய்வபர்களுக்கு மட்டும் எக்ஸ்க்லூசிவாக பதிவிடுகின்றனர் அதற்கு இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரைப் என்ற ஆப்ஷனும் இருக்கிறது. இதை வைத்து பல மாடல்கள் பணம் சம்பாதித்து வருகின்றனர்.

அப்படி சமீபத்தில் நடிகை மற்றும் இன்ஸ்டா பிரபலமான தர்ஷா குப்தாவின் புகைப்படம் வைரலானது. அவரது பிகினி புகைப்படம் கடந்த 2 நாட்களாக இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது Subscription-க்கு மாதம் 440 ரூபாய் வசூலிக்கிறார். அவர் பக்கத்திற்கு 800 நபருக்கு மேல் Subscribers இருக்கின்றனர். அதற்கு நாம் கணக்கு போட்டு பார்த்தால் மாதம் 3.5 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது. இதன் மீது நெட்டிசன்கள் பலரும் அவர்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த ஆப்ஷனை வைத்து பல மாடல்கள் அவர்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களின் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
- சூர்யா நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘கங்குவா’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
- சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர் திஷா பதானி.
சூர்யா நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் 'கங்குவா' படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் திஷா பதானி.
லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு, இந்தி சினிமாவிலும், வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன், பிரபாஸ், அமிதாப்பச்சன் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் கல்கி 2898 ஏடி என்ற படத்திலும் திஷா பதானி முக்க்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர் திஷா பதானி.
திஷாவும் அவரது நெருங்கிய தோழியான மவுனி ராயும் அடிக்கடி பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் திஷாபதானி விடுமுறை கொண்டாட்டமாக தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் பிகினி உடையில் துள்ளி விளையாடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் திவ்ய பாரதி.
- தற்போது திவ்ய பாரதி இலங்கையில் பொழுதை கழித்து வருகிறார். அங்கு கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்.
'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் திவ்ய பாரதி. 'ஆசை', 'மதில் மேல் காதல்' போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
பேச்சுலர் படத்தில் ஜி.வி.பிரகாசுடன், அவர் கிளாமராக நடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தில் அவர்களுக்கு இடையே இருக்கும் நெருக்கமான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்.
தற்போது திவ்ய பாரதி இலங்கையில் பொழுதை கழித்து வருகிறார். அங்கு கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அவற்றை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. திவ்யாபாரதி தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'கிங்ஸ்டன்' படத்தில் நடித்து வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






