என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2026 IPL தொடர்: அஸ்வின் கணித்த CSK அணியின் பிளேயிங் 11
    X

    2026 IPL தொடர்: அஸ்வின் கணித்த CSK அணியின் பிளேயிங் 11

    • பிரசாந்த் வீர் என்ற ஆல் ரவுண்டர் வீரரை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.
    • 19 வயதான கார்த்திக் சர்மாவை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் நடந்தது. இந்த ஏலத்தில் பிரசாந்த் வீர் என்ற (அன்கேப்ட் வீரர்) ஆல் ரவுண்டர் வீரரை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஜடேஜாவிற்கு மாற்றாக பிரசாந்த் வீர் இருப்பர் என்று சி.எஸ்.கே அணி எதிர்பார்த்து இந்த விலையை கொடுத்துள்ளது.

    இதனையடுத்து ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான கார்த்திக் சர்மா (அன்கேப்ட் வீரர்) அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரையும் சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன 2 அன்கேப்ட் வீரர் வீரர்களையும் சி.எஸ்.கே அணி வாங்கியுள்ளது.

    பிரபல சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹாரை ரூ. 5.20 கோடிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் அகீல் ஹொசைனை ரூ. 2 கோடிக்கும் சி.எஸ்.கே. ஏலம் எடுத்தது. மேலும் சர்ஃபராஸ் கான் ரூ. 75 லட்சம், மேத்யூ ஷார்ட் ரூ. 1.50 கோடி மற்றும் மாட் ஹென்றி ரூ. 2 கோடிக்கும் சிஎஸ்கே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

    இந்நிலையில், 2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்சின் பிளேயிங் 11 இதுவாக தான் இருக்கும் என்று முன்னாள் சிஎஸ்கே அஸ்வின் கணித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அஸ்வினின் CSK பிளேயிங் 11

    ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ், பிரசாந்த் வீர், எம்.எஸ். தோனி, அகீல் ஹொசைன்/மாட் ஹென்றி, கலீல் அகமது, நாதன் எல்லிஸ், நூர் அகமது,

    இம்பாக்ட் வீரர்கள் : அன்ஷுல் கம்போஜ் / கார்த்திக் சர்மா / ஷ்ரேயாஸ் கோபால் / சர்ஃப்ராஸ் கான் (சூழ்நிலையின் அடிப்படையில்)

    Next Story
    ×