என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தான் 4 நாட்களில் முடிவை திரும்ப பெறும்- அஸ்வின்
- இந்தியா-பாகிஸ்தான் போட்டி நிச்சயமாக 100 சதவீதம் நடைபெறும்.
- ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக விளையாடமாட்டேன் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
டி20 உலக கோப்பையில் இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பது தொடர்பாக முன்னாள் சுழற்பந்து வீரர் ஆர்.அஸ்வின் கூறியதாவது:-
இந்தியா-பாகிஸ்தான் போட்டி நிச்சயமாக 100 சதவீதம் நடைபெறும். அடுத்த 4 அல்லது 5 தினங்களில் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கும் என்று நான் நினைக்கிறேன். நானும் இந்தப்போட்டியை பார்க்க விரும்புகிறேன்.
பாகிஸ்தான் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். ஒளிபரப்பு நிறுவனம் பெரும் தொகையை இழப்பார்கள். எனவே ஒரு சமரசம் ஏற்பட்டாக வேண்டும். ஐ.சி.சி.யின் அனைத்து உறுப்பினர்களும் இழப்புகளை சந்திப்பார்கள். பாகிஸ்தான் லீக் கிரிக்கெட் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதற்கு ஐ.சி.சி. தடை விதிக்கலாம்.
இந்தியா-பாகிஸ்தான் பொதுவான மைதானத்தில் தான் மோதுகின்றன. எனவே மைதானம் குறித்த பிரச்சினை இல்லை. ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக விளையாடமாட்டேன் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.






