என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிட்னி தண்டர்"

    • 2024-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
    • கடந்த செப்டம்பரில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.

    சென்னை:

    இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தார். 2025 ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இடம்பிடித்த அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் சி.எஸ்.கே. அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    இதனால் கடந்த செப்டம்பரில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அஸ்வின் அறிவித்தார். ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

    அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.

    இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரில் அவர் இணைந்தார். சிட்னி தண்டர் அணிக்காக கையெழுத்திட்டுள்ள அவர், பிபிஎல் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரரானார். அவர் பிபிஎல் தொடரில் இணைந்ததை வீடியோ மூலம் வெளியிட்டார்.

    இந்நிலையில், முழங்கால் காயம் காரணமாக வரவிருக்கும் பிக் பாஷ் லீக் சீசனில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார்.

    இந்த சீசனுக்கான அவரது அணியான சிட்னி தண்டர், சென்னையில் பயிற்சியின்போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது.

    • 2024-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
    • சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.

    இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தார். 2025 ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக இடம் பிடித்த அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். தான் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

    அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஸ் தொடரில் அவர் இணைந்துள்ளார். அவர் சிட்னி தண்டர் அணிக்காக கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் பிபிஎல் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரரானார் அஸ்வின்.

    அவர் பிபிஎல் தொடரில் இணைந்ததை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதலில் ஆடிய சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 151 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய சிட்னி தண்டர் 157 ரன்கள் எடுத்து வென்றது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    நேற்று நடந்த சேலஞ்சர் சுற்று போட்டியில் சிட்னி தண்டர், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. ஜோர்டான் சில்க் 43 ரன்னும், துவார்ஷுயிஸ் 30 ரன்னும், ஹென்ரிக்ஸ் 29 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து இறங்கிய சிட்னி தண்டர் அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சிட்னி தண்டர் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    சாம் பில்லிங்ஸ் 29 பந்தில் 42 ரன் குவித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததால் ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    வரும் 27-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் சிட்னி தண்டர் அணி, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியுடன் மோதுகிறது.

    • முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.
    • இதனையடுத்து களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பிக்பாஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு வார்னர் தலைமையிலான சிட்னி தண்டரும் நாதன் எல்லீஸ் தலைமையிலான ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் தகுதி பெற்றது.

    இந்நிலையில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் சங்கா 67 ரன்கள் குவித்தார். ஹோபார்ட் ஹரிகேன்ஸ் தரப்பில் கேப்டன் எல்லீஸ், ரிலே மெரிடித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் ஓவன்- காலேப் ஜூவல் களமிறங்கினர். தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய ஓவன் 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    • பிக்பாஷ் லீக் தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
    • ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் ஓவன் சதம் அடித்து அசத்தினார்.

    பிக்பாஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்யில் வார்னர் தலைமையிலான சிட்னி தண்டரும் நாதன் எல்லீஸ் தலைமையிலான ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    இந்த போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் ஓவன், அதிரடியாக விளையாடிய 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார். குறிப்பாக ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல இவர் முக்கிய பங்காற்றினார்.

    இந்நிலையில் 2015-ல் ரசிகனாக ஹரிகேன்ஸ் அணியின் வெற்றியை ரசித்த ஓவன், 10 ஆண்டுகளுப் பிறகு (2025) ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல ஒரு வீரனாக களத்தில் ஆடியுள்ளார். இந்த இரு புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×