என் மலர்
சினிமா செய்திகள்

கவனம் ஈர்க்கும் 'ஹாட் ஸ்பாட் 2 மச்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
- இப்படம் சமூகப் பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
- 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ஹாட் ஸ்பாட் 2 மச்' (Hot Spot 2 Much) என்பது 2024-ம் ஆண்டு வெளிவந்த 'ஹாட் ஸ்பாட்' திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள புதிய தமிழ் அந்தாலஜி திரைப்படம் இது.
விஷ்ணு விஷால் தயாரித்து, தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர், எம்.எஸ். பாஸ்கர், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் சமூகப் பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிடைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 'ஹாட் ஸ்பாட் 2 மச்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Next Story






