விமர்சனங்களால் 'ஆர்யன்' படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை மாற்றிய படக்குழு

ஆர்யன் படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். கடந்த வாரம் வெளியான ஆர்யன் படம் மக்களிடையே கலவையான விமர்சங்களையே பெற்றது.
விமர்சனங்களால் 'ஆர்யன்' படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை மாற்றிய படக்குழு
Published on

'வெண்ணிலா கபடிகுழு', 'நீர்ப்பறவை', 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்', 'கட்டா குஸ்தி' போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார்.

இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

கடந்த வாரம் வெளியான இப்படம் மக்களிடையே கலவையான விமர்சங்களையே பெற்றது. இதனால் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை படக்குழு மாற்றியமைத்துள்ளனர். இனிமேல் திரையரங்குகளில் இந்த கிளைமேக்ஸ் காட்சியை பார்க்கலாம் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com