என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோகேஷ் அஜில்ஸ்"

    • விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஆர்யன்.
    • இதனைத்தொடர்ந்து விஷ்ணு விஷாலின் 25-வது படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

    வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

    விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஆர்யன். இப்படத்தை அறிமுக இயக்குநரான பிரவீன் இயக்கியுள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ஆர்யன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 31ம் தேதி வெளியாகிறது.

    இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் 25-வது பட இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஷ்ணு விஷாலின் 25-வது படத்தை லெவன் திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜ்லீஸ் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தை Stone Bench நிறுவனம் தயாரிக்கிறது.

    திரையரங்குகளில் ஓரளவு வெற்றிப்படமான லெவன் ஓடிடி வெளியீட்டில் பெரிதாகக் கவனிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'லெவன்'.
    • தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகவுள்ளது.

    'கலகலப்பு 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் 'ஆக்ஷன்' ஆகிய திரைப்படங்களில் இயக்குனர் சுந்தர். சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'லெவன்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ள இத்திரைப்படத்தில் 'சரபம்', 'சிவப்பு' மற்றும் 'பிரம்மன்' உள்ளிட்ட படங்களில் நடித்த நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார்.


    மேலும், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் 'விருமாண்டி' புகழ் அபிராமி, 'வத்திக்குச்சி' புகழ் திலீபன், 'மெட்ராஸ்' புகழ் ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.


    'லெவன்' திரைப்படம் குறித்து இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் பேசியதாவது, "ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு த்ரில்லராக 'லெவன்' அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள், அவர்களுக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றி. அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.


    'லெவன்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×