என் மலர்

  நீங்கள் தேடியது "Naveen Chandra"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் - சினேகா இணைந்து நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா ஒப்பந்தமாகி இருக்கிறார். #Dhanush
  அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களை தயாரிக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸின் 34-வது படத்தை துரை செந்தில்குமாரும், 35-வது படத்தை ராம்குமாரும் இயக்குகின்றனர்.

  இதில் துரை செந்தில்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் தனுஷுடன் சினேகா இணைந்து நடிக்கிறார்.  இந்த நிலையில், தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் சரபம் படத்தில் நாயகனாக நடித்திருந்தார். மேலும் சில தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  விவேக் - மெர்வின் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். #Dhanush #Sneha #NaveenChandra

  ×