என் மலர்tooltip icon

    OTT

    நவீன் சந்திரா நடித்த `லெவன் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு
    X

    நவீன் சந்திரா நடித்த `லெவன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

    • ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் வெளியானது லெவன் திரைப்படம்.
    • படத்தின் இசையை டி.இமான் மேற்கொண்டார்.

    ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்'. இப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தில் இடம் பெற்ற ஃப்ளாஷ் பேக் போர்ஷன் மற்றும் கிளைமாக்ஸ் டிவிஸ்ட் மக்கள் பலரால் பேசப்பட்டது. இப்படத்தில் ரேயா ஹரி, அபிராமி, சஷாங், திலீபன், ரித்விகா, ஆடுகளம் நரேன், ரவி வர்மா என பலரும் நடித்துள்ளனர். படத்தின் இசையை டி.இமான் மேற்கொண்டார்.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி வெளியீட்டை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஆஹா மற்றும் டெண்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    Next Story
    ×