என் மலர்

  நீங்கள் தேடியது "Vivek Mervin"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் - சினேகா இணைந்து நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா ஒப்பந்தமாகி இருக்கிறார். #Dhanush
  அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களை தயாரிக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸின் 34-வது படத்தை துரை செந்தில்குமாரும், 35-வது படத்தை ராம்குமாரும் இயக்குகின்றனர்.

  இதில் துரை செந்தில்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் தனுஷுடன் சினேகா இணைந்து நடிக்கிறார்.  இந்த நிலையில், தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் சரபம் படத்தில் நாயகனாக நடித்திருந்தார். மேலும் சில தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  விவேக் - மெர்வின் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். #Dhanush #Sneha #NaveenChandra

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி - ராஷ்மிகா மந்தானா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #Karthi #K19
  மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் நடித்து வரும் கார்த்தியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது.

  எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக உருவாகும் இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தானா தமிழில் அறிமுகமாகிறார். யோகி பாபு, பொன்னம்பலம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கார்த்தியின் 19-வது படமாக உருவாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கின்றனர்.


  விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவையும், ஜெய் கலை பணிகளையும், ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் சில இடங்களில் பெரிய செட் போடப்படுகிறது. #K19 #Karthi #Karthi19 #RashmikaMandanna

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லோகேஷ் கனகராஜ் படத்தை தொடர்ந்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் பணியாற்றவிருக்கும் கலைஞர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. #Karthi #K19
  கார்த்தி நடித்த தேவ் படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கார்த்தி தற்போது மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

  அடுத்ததாக ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். கார்த்தியின் 19-வது படமாக உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் கலைஞர்கள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.  கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிப்பதாக முன்னதாக கூறியிருந்த நிலையில், தற்போது படக்குழு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு மார்ச் இரண்டாவது வாரத்தில் துவங்கவிருக்கும் நிலையில், படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

  ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவையும், ஜெய் கலை பணிகளையும், ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். #K19 #Karthi #Karthi19 #RashmikaMandanna

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருக்கிறார். அத்துடன் மற்றொரு அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. #VijaySethupathi #VijayChander
  விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத் படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் `மாமனிதன்' படத்திலும், ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். 

  அடுத்ததாக ‘வாலு’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் துவங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், விஜய் சேதுபதி ஜோடியாக நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா  நடிக்கவிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.
  இந்த நிலையில், ராஷி கண்ணா நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் காமெடி நடிகர் சூரியும் இந்த படத்தில் நடிக்கிறார். அத்துடன் விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைப்பதாக இயக்குநர் விஜய் சந்தர் தெரிவித்துள்ளார்.  

  வடசென்னை கதையாக உருவாகும் இந்த படத்தை விஜயவாகினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. #VijaySethupathi #VijayChander #NivethaPethuraj #RaashiKhanna

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துரை செந்தில்குமார், ராம் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் இரு படங்களை அடுத்தடுத்து தயாரிக்க இருப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #DhanushWithSathyajyothi #Dhanush
  சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

  இந்த நிலையில், தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த 2 படங்களை தயாரிக்கவிருப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் - தனுஷ் கூட்டணி மீண்டும் இணையும் படத்தையும், ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.


  இதில் துரை செந்தில்குமார் இயக்கும் படத்திற்கு விவேக் - மெர்வின் இணைந்து இசையமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதுதவிர தனுஷ் வெற்றிமாறனின் வடசென்னை 2, அசுரன் படங்களில் நடிக்கவிருக்கிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், தான் இயக்கி நடிக்கும் பிரம்மாண்ட படம் என இந்த ஆண்டு தனுஷ் பிசியாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  தனுஷ் நடிப்பில் அடுத்ததாக `எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீசாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Dhanush #DhanushWithSathyajyothi

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குழந்தைகளின் மன உலகை விவரிக்கும் வகையில் புலிகளை மையமாக வைத்து அட்வெஞ்சர் திரைப்படத்தில் அனிருத் ஒரு பாடலுக்கு இசையமைக்க இருக்கிறார். #Anirudh
  குழந்தைகளின் மன உலகை விவரிக்கும் வகையில் புலிகளை மையமாக வைத்து அட்வெஞ்சர் திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்குகிறார்.

  இவர் காக்கி சட்டை, கொடி ஆகிய படங்களில் துணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். புலிகளை மையமாக வைத்து சமூக கருத்துகளையும் வலியுறுத்தும்விதமாக உருவாகிவரும் இந்தப் படத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறுகின்றன.

  இதன் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் அக்டோபர் மாதம் படப்பிடிப்பை தொடங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இசையமைப்பாளர்கள் விவேக், மெர்வினோடு அனிருத்தும் இணைந்து இசையமைக்கிறார். சென்னை, கேரளாவின் வனப்பகுதி மற்றும் வடஇந்தியாவில் சில இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. #Anirudh

  ×