என் மலர்

  நீங்கள் தேடியது "Baghyaraj Kannan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி - ராஷ்மிகா மந்தானா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #Karthi #K19
  மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் நடித்து வரும் கார்த்தியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது.

  எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக உருவாகும் இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தானா தமிழில் அறிமுகமாகிறார். யோகி பாபு, பொன்னம்பலம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கார்த்தியின் 19-வது படமாக உருவாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கின்றனர்.


  விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவையும், ஜெய் கலை பணிகளையும், ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் சில இடங்களில் பெரிய செட் போடப்படுகிறது. #K19 #Karthi #Karthi19 #RashmikaMandanna

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லோகேஷ் கனகராஜ் படத்தை தொடர்ந்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் பணியாற்றவிருக்கும் கலைஞர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. #Karthi #K19
  கார்த்தி நடித்த தேவ் படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கார்த்தி தற்போது மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

  அடுத்ததாக ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். கார்த்தியின் 19-வது படமாக உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் கலைஞர்கள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.  கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிப்பதாக முன்னதாக கூறியிருந்த நிலையில், தற்போது படக்குழு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு மார்ச் இரண்டாவது வாரத்தில் துவங்கவிருக்கும் நிலையில், படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

  ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவையும், ஜெய் கலை பணிகளையும், ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். #K19 #Karthi #Karthi19 #RashmikaMandanna

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா மந்தானா, தமிழில் கார்த்தி ஜோடியாக அறிமுகமாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Karthi #RashmikaMandanna
  கார்த்தி நடித்த தேவ் படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கார்த்தி தற்போது மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

  அடுத்ததாக ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கார்த்தி ஜோடியாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தானா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.  தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். அவர் விஜய் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாவதாக சில சில வதந்திகள் பரவிய நிலையில், ராஷ்மிகா கார்த்தி ஜோடியாக தமிழில் அறிமுகமாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Karthi #RashmikaMandanna #BaghyarajKannan

  ×