என் மலர்

  சினிமா

  கார்த்தியின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  X

  கார்த்தியின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லோகேஷ் கனகராஜ் படத்தை தொடர்ந்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் பணியாற்றவிருக்கும் கலைஞர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. #Karthi #K19
  கார்த்தி நடித்த தேவ் படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கார்த்தி தற்போது மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

  அடுத்ததாக ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். கார்த்தியின் 19-வது படமாக உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் கலைஞர்கள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.  கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிப்பதாக முன்னதாக கூறியிருந்த நிலையில், தற்போது படக்குழு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு மார்ச் இரண்டாவது வாரத்தில் துவங்கவிருக்கும் நிலையில், படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

  ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவையும், ஜெய் கலை பணிகளையும், ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். #K19 #Karthi #Karthi19 #RashmikaMandanna

  Next Story
  ×