என் மலர்

  நீங்கள் தேடியது "Vijay Chander"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் `சங்கத்தமிழன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. #SangaTamizhan #VijaySethupathi
  ‘வாலு’, `ஸ்கெட்ச்‘ ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து `சங்கத்தமிழன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் முறுக்கு மீசையுடன் வித்தியாசமான தோற்றத்தில் விஜய்சேதுபதி உள்ளார்.

  இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் நிலையில், விஜய் சேதுபதி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில், இரட்டை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  நாசர், சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர். #SangaTamizhan #VijaySethupathi #VijayChander #RaashiKhanna #NivethaPethuraj

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி - விஜய் சந்தர் இணையும் புதிய படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Sangathamizhan #VijaySethupathi
  விஜய் சேதுபதி நடிப்பில் `சூப்பர் டீலக்ஸ்' படம் வருகிற மார்ச் 29-ந் தேதி திரைக்கு வருகிறது. விஜய் சேதுபதி தற்போது வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

  விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள். காமெடி வேடத்தில் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.  இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, எம்.பிரபாகரன் கலை பணிகளையும், அனல் அரசு சண்டைக்காட்சிகளையும், பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.

  இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் சமீபத்தில் முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது. #Sangathamizhan #VijaySethupathi #VijayChander #RaashiKhanna #NivethaPethuraj

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். #VijaySethupathi
  சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்சந்தர். இவர் தற்போது தனது மூன்றாவது படத்தை விஜய் சேதுபதியைக் கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிப்பது ஏற்கெனவே படக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது. 

  தற்போது நிவேதா பெத்துராஜ் மற்றொரு கதாநாயகியாக நடிப்பது உறுதியாகியுள்ளது. விஜயா புரொடக்‌‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்குத் தற்காலிகமாக ‘விவிவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. விவேக், மெர்வின் இணைந்து இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.   விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருக்கிறார். அத்துடன் மற்றொரு அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. #VijaySethupathi #VijayChander
  விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத் படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் `மாமனிதன்' படத்திலும், ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். 

  அடுத்ததாக ‘வாலு’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் துவங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், விஜய் சேதுபதி ஜோடியாக நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா  நடிக்கவிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.
  இந்த நிலையில், ராஷி கண்ணா நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் காமெடி நடிகர் சூரியும் இந்த படத்தில் நடிக்கிறார். அத்துடன் விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைப்பதாக இயக்குநர் விஜய் சந்தர் தெரிவித்துள்ளார்.  

  வடசென்னை கதையாக உருவாகும் இந்த படத்தை விஜயவாகினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. #VijaySethupathi #VijayChander #NivethaPethuraj #RaashiKhanna

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச்சில் துவங்கும் நிலையில், இரு முன்னணி நாயகிகள் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். #VijaySethupathi #VijayChander
  விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத் படங்கள் தயாராகி வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். 

  அடுத்ததாக ‘வாலு’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் துவங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் காமெடி நடிகர் சூரி நடிப்பது உறுதியாகி இருக்கிறது.  விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கும் 2 கதாநாயகிகள் யார் என்பது உறுதி செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது தெரியவந்துள்ளது. இருவருமே சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் கதாநாயகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வடசென்னை கதையாக உருவாகும் இந்த படத்தை விஜயவாகினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார். #VijaySethupathi #VijayChander #NivethaPethuraj #RaashiKhanna

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் பிசியான நடிகரான விஜய் சேதுபதி அடுத்தடுத்தாக விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் வட சென்னையை மையப்படுத்திய கதை என்று கூறப்படுகிறது. #VijaySethupathi
  சிம்புவை வைத்து வாலு, விக்ரமை வைத்து ஸ்கெட்ச் படங்களை இயக்கியவர் விஜய்சந்தர். இவர் அடுத்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார்.

  முந்தைய இரு படங்களையும் வடசென்னையை மையமாக கொண்ட கதைகளாக அமைத்து இருந்தார். அதேபோல இந்த கதையும் வடசென்னை தொடர்பான கதை என்று தகவல் வருகிறது. விஜய்சேதுபதி கையில் 10-க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. இருந்தாலும் பாரம்பரிய நிறுவனமான விஜயவாகினி தயாரிப்பு என்பதால் ஒப்புக்கொண்டுள்ளார் என்கின்றனர்.   இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கியிருக்கும் நிலையில், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க இருக்கிறது. படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. #VijaySethupathi

  ×