என் மலர்
சினிமா

வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
தமிழ் சினிமாவில் பிசியான நடிகரான விஜய் சேதுபதி அடுத்தடுத்தாக விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் வட சென்னையை மையப்படுத்திய கதை என்று கூறப்படுகிறது. #VijaySethupathi
சிம்புவை வைத்து வாலு, விக்ரமை வைத்து ஸ்கெட்ச் படங்களை இயக்கியவர் விஜய்சந்தர். இவர் அடுத்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார்.
முந்தைய இரு படங்களையும் வடசென்னையை மையமாக கொண்ட கதைகளாக அமைத்து இருந்தார். அதேபோல இந்த கதையும் வடசென்னை தொடர்பான கதை என்று தகவல் வருகிறது. விஜய்சேதுபதி கையில் 10-க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. இருந்தாலும் பாரம்பரிய நிறுவனமான விஜயவாகினி தயாரிப்பு என்பதால் ஒப்புக்கொண்டுள்ளார் என்கின்றனர்.

இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கியிருக்கும் நிலையில், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க இருக்கிறது. படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. #VijaySethupathi
Next Story






