என் மலர்

  நீங்கள் தேடியது "RDM"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பன்முகத் தன்மைக் கொண்டவராக வலம் வருபவர் சசிகுமார்.
  • இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

  தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக வலம் வருபவர் சசிகுமார். இவர் தற்போது 'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தை இயக்கிய ஆர்.டி.எம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் நவீன் சந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


  ஃபைவ் ஸ்டார் கிரியேஷன் சார்பில் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ரான் ஈதன் யோஹான் இசையமைக்க கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார். எம். தீபக் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


  எவிடன்ஸ் போஸ்டர்

  அதன்படி, இப்படத்திற்கு 'எவிடன்ஸ்' (Evidence) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நடிகர் சசிகுமார் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார்.
  • இப்படத்தை இயக்குனர் ஆர்டிஎம் இயக்குகிறார்.

  தமிழ் திரையுலகில் சுப்ரமணியபுரம், ஈசன் படங்களை இயக்கிய சசிகுமார், தற்போது படம் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன், குட்டி புலி, தாரை தப்பட்டை, பேட்ட உள்ளிட்ட பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுக்களை பெற்றது.


  இதையடுத்து சசிகுமார் காவல்துறை உங்கள் நண்பன் படத்தை இயக்கிய ஆர்டிஎம் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நவீன் சந்திரா மற்றும் காமெடி நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


  இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தெரிவித்துள்ளனர்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுக்களை பெற்றது.
  • இவரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  தமிழ் திரையுலகில் சுப்ரமணியபுரம், ஈசன் படங்களை இயக்கிய சசிகுமார், தற்போது படம் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன், குட்டி புலி, தாரை தப்பட்டை, பேட்ட உள்ளிட்ட பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுக்களை பெற்றது.  இந்நிலையில் சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காவல்துறை உங்கள் நண்பன் படத்தை இயக்கிய ஆர்டிஎம் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் நடிக்கிறார். இதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நவீன் சந்திரா இணைந்து நடிக்கிறார். இப்படத்தை தயாரிப்பாளரும் இயக்குனருமான ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆர்.டி.எம். இயக்கத்தில் உருவாகும் `காவல்துறை உங்கள் நண்பன்' படத்தின் மூலமாக சுரேஷ் ரவி - ரவீனா இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். #KavalThuraiUngalNanban #SureshRavi #Raveena
  பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளரான சுரேஷ் ரவி மோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதேபோல் பிரபல பின்னணி குரல் பதிவாளரான ரவீனா, விதார்த்துடன் கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

  இந்த நிலையில், சுரேஷ் ரவி - ரவீனா இருவரும் புதிய படம் மூலம் இணைந்துள்ளனர். காவல்துறை உங்கள் நண்பன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஆர்.டி.எம். இயக்குகிறார்.   காவலருக்கும் - டெலிவரி பணியாளருக்குமான உறவை பற்றி பேசும் இந்த படத்தை பி.ஆர்.டாக்கிஸ் மற்றும் வைட் மூன் டாக்கிஸ் இணைந்து தயாரிக்கிறது.

  ஆதித்யா- சூர்யா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் இடம்பெறும் ராணி தேனீ என்ற பாடலை படக்குழு உருவாக்கியுள்ளது. இந்த பாடலை பிரபல பின்னணி பாடகர் ஹரிசரண் பாடி இருக்கிறார். #KavalThuraiUngalNanban #SureshRavi #Raveena

  ×