சசிகுமார் படத்தின் புதிய அப்டேட்

நடிகர் சசிகுமார் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை இயக்குனர் ஆர்டிஎம் இயக்குகிறார்.
சசிகுமார் படத்தின் புதிய அப்டேட்
Published on

தமிழ் திரையுலகில் சுப்ரமணியபுரம், ஈசன் படங்களை இயக்கிய சசிகுமார், தற்போது படம் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன், குட்டி புலி, தாரை தப்பட்டை, பேட்ட உள்ளிட்ட பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுக்களை பெற்றது.

இதையடுத்து சசிகுமார் காவல்துறை உங்கள் நண்பன் படத்தை இயக்கிய ஆர்டிஎம் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நவீன் சந்திரா மற்றும் காமெடி நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com