என் மலர்
இந்தியா

பச்சிளம் குழந்தைகளை கழுத்தறுத்துக் கொன்று தாய் தற்கொலை - கர்நாடகாவில் அதிர்ச்சி
- 1.5 வயதுடைய பாத்திமா என்ற குழந்தையும், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை என 2 பெண் குழந்தைகள் இருந்தன.
- அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து அபியா பானுவும் தற்கொலை செய்துகொண்டார்.
கர்நாடகாவில் தாய் தனது 2 குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பேட்டபுரா பகுதியை சேர்ந்தவர் அபியா பானு (25 வயது). இவரது கணவர் சயது முசவீர் பெங்களூரில் உள்ள ஒரு மாலில் பணிபுரிகிறார்.
இவர்களுக்கு 1.5 வயதுடைய பாத்திமா என்ற குழந்தையும், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை என 2 பெண் குழந்தைகள் இருந்தன.
மூத்த மகள் பாத்திமா பிறந்த நிலையில் 2வதும் பெண் குழந்தை பிறந்ததால் பானு மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் கணவன்-மனைவி இடையேயும் இதுதொடர்பாக சச்சரவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை 2 பச்சிளம் குழந்தைகளையும் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்த தாய் பானு, அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து அபியா பானுவும் தற்கொலை செய்துகொண்டார்.
மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






