என் மலர்
இந்தியா

50 வயதில் 14-வது குழந்தையை பெற்றெடுத்த பெண்மணி.. உ.பி.யில் வியப்பு!
- மூத்த மகன் வயது 22. கடைசி குழந்தை வயது 3.
- பிரசவத்தின்போது அவரது 22 வயது மகனும் உடன் இருந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் 50 வயது பெண் ஒருவர் தனது 14 வது குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டம் பில்குவாவில் உள்ள பஜ்ரங்புரியில் வசிப்பவர் இமாமுதீன். இவரது 50 வயது மனைவி குடியா. இவர்களுக்கு 13 குழந்தைகள். மூத்த மகன் வயது 22. கடைசி குழந்தை வயது 3.
இந்நிலையில் 50 வயதில் மீண்டும் கருத்தரித்த குடியா, கடந்த வெள்ளிக்கிழமை 14வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனை செல்லும்போது ஆம்புலன்ஸிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது அவரது 22 வயது மகனும் உடன் இருந்தார்.
அதன்பின் குடியாவும், குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாயும் சேயும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.
இமாமுதீனின் மனைவிக்கு 14வது குழந்தை பிறந்த செய்தியைக் கேள்விப்பட்ட பிறகு, அருகிலுள்ள பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், தொலைதூர இடங்களிலிருந்தும் மக்கள் இமாமுதீனையும் அவரது 14 குழந்தைகளை கொண்ட குடும்பத்தையும் வருகிறார்கள்.






