வில்லியாக நடிக்கிறாரா?... அட்லி - அல்லு அர்ஜூன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்

அட்லி, தற்போது அல்லு அர்ஜூன்-தீபிகா படுகோனே நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
வில்லியாக நடிக்கிறாரா?... அட்லி - அல்லு அர்ஜூன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்
Published on

'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என தமிழ் படங்களில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த அட்லி, பாலிவுட் சினிமாவிலும் அசத்தினார். ஷாருக்கான்-நயன்தாரா கூட்டணியில் அவர் இயக்கிய 'ஜவான்' படம் ரூ.1,000 கோடியை தாண்டி வசூல் குவித்து சாதனை படைத்தது.

அட்லி, தற்போது அல்லு அர்ஜூன்-தீபிகா படுகோனே நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். படத்தில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com