புதிய அவதாரத்தில் தேவயானி வெளியான தகவல்

1990 கால கட்டங்களில் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் தேவயானி.இவருக்கு இனியா, பிரியங்கா என்ற மகள்கள் உள்ளனர்.
புதிய அவதாரத்தில் தேவயானி வெளியான  தகவல்
Published on

1990 கால கட்டங்களில் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் தேவயானி. தொட்டா சிணுங்கி என்ற படத்தின் மூலம் அறிமுகமான தேவயானி காதல் கோட்டை, நீ வருவாய் என, நினைத்தேன் வந்தாய், சூரிய வம்சம், விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்பட பல படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களை கவர்ந்தவர்.

நீ வருவாய் என படத்தில் நடித்த போது படத்தின் இயக்குனரான ராஜகுமாரனுடன் காதல் ஏற்பட்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2001-ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என்ற மகள்கள் உள்ளனர்.

திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வந்த தேவயானி 'காதலுடன்' என்ற படத்தை தயாரித்து திரை உலகில் தயாரிப்பாளராக உருவெடுத்தார்.

தொடர்ந்து நல்லகுடும்ப தலைவியாக இருந்து வரும் தேவயானி ராஜகுமாரனின் சொந்த மாவட்டமான ஈரோடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் விவசாய நிலம் வாங்கி காய்கறி மற்றும் தென்னை மா மரங்கள் நட்டு விவசாயமும் செய்து வருகிறார். இது மட்டுமின்றி ஆசிரியை பணியில் ஆர்வம் கொண்டு ஆசிரியை படிப்பை முடித்து சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாகவும் பணியாற்றினார்.

நடிகை, தயாரிப்பாளர், விவசாயி, ஆசிரியை என்ற பன் முகங்களை கொண்ட தேவயானி தற்போது இயக்குனர் பணியில் ஆர்வம் கொண்டு இயக்குனர் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்கின்றார்.

சென்னையில் உள்ள பிரபல திரைப்பட கல்லூரி ஒன்றில் இயக்குனர் பயிற்சி பள்ளியில் படித்து வரும் தேவயானி குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

அடுத்ததாக சினிமாவில் புதிய படம் ஒன்றை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கிறார் தேவயானி. ஏற்கனவே ரேவதி, ஜீவிதா, சுகாசினி, ராதிகா, குஷ்பு ஆகியோர் சினிமா மற்றும் சின்னத்திரை தொடர்களை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தேவயானி இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com