என் மலர்
நீங்கள் தேடியது "meetha ragunath"
- 3 BHK படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளனர்.
- 3 BHK படத்தில் சரத் குமார், தேவயாணி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சித்தார்த்தின் 40 ஆவது திரைப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத் குமார், தேவயாணியும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். அம்ரித் ராம்நாத் கடந்தாண்டு வெளியான வருஷங்களுக்கு சேஷம் என்ற மலையாள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சித்தார்த்தின் 40-வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 3 BHK என்று பெயரிட்டுள்ளனர். இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Presenting you the title teaser & first look of #3BHK!▶️Tamil https://t.co/C2NqiaHIvW▶️Telugu https://t.co/WKKbLQQLAx நம்ம எல்லாரோட கதையா இது இருக்கும்னு நம்புரோம் ❤️?ఇది మన అందరి కథలాగా ఉంటుందని ఆశిస్తున్నాం ❤️?"Every ordinary family has an Extraordinary story"… pic.twitter.com/vrFVbGHwBn
— Shanthi Talkies (@ShanthiTalkies) February 5, 2025
- இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
- இப்படத்தில் சரத் குமார், தேவயாணி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சித்தார்த்தின் 40 ஆவது திரைப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தலைப்பு இன்னும் வைக்கப்படவில்லை.
இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் சரத் குமார், தேவயாணி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். அம்ரித் ராம்நாத் கடந்தாண்டு வெளியான வருஷங்களுக்கு சேஷம் என்ற மலையாள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சித்தார்த்தின் 40-வது படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
நாளைக்கு evening 6 மணிக்கு First Look & Title teaser release பண்றோம், பாத்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க?❤️రేపు evening 6 గంటలకు First Look & Title teaser release చేస్తున్నారు. చూసి ఎలా ఉందో చెప్పండి ?❤️#Siddharth40 #Siddharth @realsarathkumar @sri_sriganesh89 #Devayani… pic.twitter.com/fN3lUAGqRM
— Shanthi Talkies (@ShanthiTalkies) February 4, 2025
- கதாநாயகி மீதா ரகுனாத்துக்கும் நல்ல புகழும், பேரும் கிடைத்தது.
- மீதா ரகுநாத் மற்றும் அவரின் கணவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
தர்புகா சிவா இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'முதல் நீ முடிவும் நீ'. கிஷேன் தாஸ் மற்றும் மீதா ரகுநாத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். மீதா ரகுநாத் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 90-ஸ் கிட்ஸ் வாழ்க்கை, காதல், நட்பு உள்ளிட்டவைகளை சார்ந்து இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், ரமேஷ் திலக், மீதா ரகுநாத் நடிப்பில் 2023 ஆண்டு வெளியான படம் 'குட் நைட்'. குறட்டை விடுபவனின் வாழ்க்கையையும் அதனால் அவனுக்கு ஏற்படும் கஷ்டங்களை இப்படம் அழகாக வெளிக்காட்டி இருக்கும். இப்படம் வெளிவந்த போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கதாநாயகன் மணிகண்டனுக்கும், கதாநாயகி மீதா ரகுனாத்துக்கும் நல்ல புகழும், பேரும் கிடைத்தது.
அப்படத்தில் மீதா ரகுநாத் மிக சிறப்பாக நடித்து இருப்பார். அப்பாவி தனத்தையும், அழகையும் ஒரு சேர நடித்து இருப்பார். இந்நிலையில் நேற்று மீதா ரகுநாத் மணம் முடித்துக் கொண்டார். மீதா ரகுநாத் மற்றும் அவரின் கணவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். சமூக வலைதளங்களில் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.