search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Ganesh"

    • 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கியவர் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.
    • இவரின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, பின்னர் 2017-ஆம் ஆண்டு வெளியான '8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். இதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கினார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

     

    ஸ்ரீ கணேஷ் - சுகாசினி சஞ்சீவ் 

    ஸ்ரீ கணேஷ் - சுகாசினி சஞ்சீவ் 

     

    இந்நிலையில் ஸ்ரீ கணேஷ் நடிகை சுகாசினி சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரும் அந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

    நடிகை சுகாசினி சஞ்சீவ் நாடக கலைஞர், மாடல், நடிகை என பண்முகத்தன்மை கொண்டவர். மேலும் விஜய் சேதுபதியின் 'சீதக்காதி', உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தில் அதர்வா அஜித் ரசிகராக நடிப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். #KuruthiAttam #Atharvaa
    அதர்வா நடிப்பில் அடுத்ததாக பூமராங் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அதர்வா தற்போது ‘8 தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வாவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதில் அஜித்குமார் மீது அன்பு கொண்ட தீவிர ரசிகராக அதர்வா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். படம் பற்றி இயக்குநர் ஸ்ரீகணேஷ் கூறியதாவது:-



    ‘‘ஒரு உச்ச நடிகரின் ரசிகரை பிரதான கதாபாத்திரமாக வைத்து, இதற்கு முன்பு சில படங்கள் வந்துள்ளன. இந்த படத்தின் நாயகன் அஜித்குமார் ரசிகராக வருவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. படத்தின் கதை மற்றும் கதாபாத்திரத்தை அதர்வாவிடம் சொன்னபோது, மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

    கதைப்படி, அதர்வா கபடி வீரர். அஜித்குமாரின் தீவிர ரசிகர். அவர் ஆடுகிற ஆட்டம்தான், குருதி ஆட்டம். கதாநாயகி பிரியா பவனி சங்கரின் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. த.முருகானந்தம் தயாரிக்கிறார். படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும்.’’ என்றார். #KuruthiAttam #Atharvaa #PriyaBhavaniShankar #AjithKumar

    ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகும் `குருதி ஆட்டம்' படத்தில் முக்கிய பிரபலங்கள் இருவர் ஒப்பந்தமாகியுள்ளனர். #KuruthiAatam #Atharvaa
    அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய `இமைக்க நொடிகள்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதர்வா நடிப்பில் அடுத்ததாக `பூமராங்', `100' உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கின்றன. 

    இந்த நிலையில் அதர்வா `8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் `குருதி ஆட்டம்' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் நாயகி தேர்வு மும்முரமாக நடந்து வரும் நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ராதாரவி மற்றும் ராதிகா சரத்குமார் ஒப்பந்தமாகி உள்ளனர்.

    இதுகுறித்து இயக்குநர் ஸ்ரீ கணேஷ் பேசியதாவது,

    ராதாரவி, ராதிகா எனது இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் நடிப்பது நிச்சயமாக படத்திற்கு மிகப்பெரிய கவன ஈர்ப்பாக அமையும். இந்த கதையை எழுதியதில் இருந்தே இவர்களை தவிர வேறு யாரையும் என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை. முதலில் இவர்கள் என் கதையை கேட்பார்களா என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது, ஆனால் நான் கதாபாத்திரத்தை எழுதியிருந்த விதம் அவர்களை கவர்ந்தது என்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமான விஷயம். முழுமனதோடு இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்கள். இந்த படத்தின் நாயகி தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது, என்றார்.



    ராக் போர்ட் என்டர்டைன்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    மதுரைப் பின்னணியில் உள்ள கேங்க்ஸ்டர்களை பற்றிய ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகிறது. #KuruthiAatam #Atharvaa

    `8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகும் `குருதி ஆட்டம்' படத்திற்கு இசையமைக்க யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகி உள்ளார். #KuruthiAatam #YuvanShankarRaja
    அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய `இமைக்க நொடிகள்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக `பூமராங்' படம் ரிலீசாக இருக்கிறது. அதர்வா தற்போது `8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் `குருதி ஆட்டம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    ராக் போர்ட் என்டர்டைன்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. யுவன் பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியானது.
    முழுக்க முழுக்க மதுரை பின்னணியில் திரில்லர் கதையாக படம் உருவாகிறது. அதர்வாவின் முழு திறமைக்கும் தீனி போடும் படமாக இந்த படமட அமையும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். கதாநாயகி தேர்வு நடைப் பெற்று வருகிறது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KuruthiAatam #Atharvaa #YuvanShankarRaja

    `8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கும் த்ரில்லர் கதையில் நடிகர் அதர்வா நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. #KuruthiAatam #Atharvaa
    அதர்வா நடிப்பில் `இமைக்க நொடிகள்', `பூமராங்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், அதர்வா அடுத்ததாக `8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் உடன் இணைந்திருக்கிறார்.

    `குருதி ஆட்டம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்திக் பூஜை சமீபத்தில் நடந்தது. படம் குறித்து இயக்குநர் ஸ்ரீ கணேஷ் பேசும் போது, "இந்த படம் முழுக்க முழுக்க மதுரை பின்னணியில் உருவாக இருக்கிறது. திரில்லர் பிண்ணனியில் உருவாகும் இந்த படம் அதர்வாவின் முழு திறமைக்கும் தீனி போடும் படமாக அமையும். கதாநாயகி தேர்வு நடைப் பெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கும்" என்றார்.  



    ராக் போர்ட் என்டர்டைன்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KuruthiAatam #Atharvaa

    ×