குருதி ஆட்டம் இயக்குனரை திருமணம் செய்துகொண்ட விஜய் சேதுபதி பட நடிகை

8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கியவர் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.இவரின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்ரீ கணேஷ் - சுகாசினி சஞ்சீவ்
ஸ்ரீ கணேஷ் - சுகாசினி சஞ்சீவ்
Published on

இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, பின்னர் 2017-ஆம் ஆண்டு வெளியான '8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். இதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கினார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஸ்ரீ கணேஷ் - சுகாசினி சஞ்சீவ் 
ஸ்ரீ கணேஷ் - சுகாசினி சஞ்சீவ் 

ஸ்ரீ கணேஷ் - சுகாசினி சஞ்சீவ் 

இந்நிலையில் ஸ்ரீ கணேஷ் நடிகை சுகாசினி சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரும் அந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை சுகாசினி சஞ்சீவ் நாடக கலைஞர், மாடல், நடிகை என பண்முகத்தன்மை கொண்டவர். மேலும் விஜய் சேதுபதியின் 'சீதக்காதி', உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com