சித்தார்த் 40 - தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அம்ரித் ராம்நாத்

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அடுத்ததாக சித்தார்த்தின் 40-வது திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.இப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படம் இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கவுள்ளார்.
சித்தார்த் 40 - தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அம்ரித் ராம்நாத்
Published on

கடந்த ஆண்டு மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது மாவீரன் திரைப்படம். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து மாபெரும் வெற்றியடைந்தது.

இதனைத் தொடர்ந்து சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அடுத்ததாக சித்தார்த்தின் 40-வது திரைப்படமான சித்தார்த் 40 திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர். இப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படம் இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் யார் என்று படக்குழுவினர் சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இப்படத்தில் சரத் குமார், தேவையாணி, மீதா ரகுநாத், சைத்ரா அசார் போன்ற பிரபல நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அம்ரித் ராம்நாத் சில மாதங்களுக்கு முன் வெளியான வருஷங்களுக்கு சேஷம் என்ற மலையாள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகினார். இப்படத்தில் இடம்பெற்ற நியாபகம் என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

சித்தார்த் 40 திரைப்படத்தின் மூலம் அம்ரித் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் மகன் அம்ரித் ராம்நாத் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com