search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைத்ரா"

    • 3 BHK படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளனர்.
    • 3 BHK படத்தில் சரத் குமார், தேவயாணி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    சித்தார்த்தின் 40 ஆவது திரைப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கி வருகிறார். 

    இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத் குமார், தேவயாணியும் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். அம்ரித் ராம்நாத் கடந்தாண்டு வெளியான வருஷங்களுக்கு சேஷம் என்ற மலையாள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், சித்தார்த்தின் 40-வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 3 BHK என்று பெயரிட்டுள்ளனர். இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
    • இப்படத்தில் சரத் குமார், தேவயாணி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    சித்தார்த்தின் 40 ஆவது திரைப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தலைப்பு இன்னும் வைக்கப்படவில்லை.

    இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் சரத் குமார், தேவயாணி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். அம்ரித் ராம்நாத் கடந்தாண்டு வெளியான வருஷங்களுக்கு சேஷம் என்ற மலையாள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், சித்தார்த்தின் 40-வது படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராஜுமுருகன் அடுத்ததாக நடிகர் சசிக்குமார் நடிப்பில் 'மை லார்ட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை சைத்ரா நடித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவராவார் ராஜு முருகன். இவர் இயக்கிய குக்கூ, ஜோக்கர், மெஹந்தி சர்கஸ் , ஜிப்ஸி ஆகிய திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது. இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது ஜப்பான் திரைப்படம் . ஆனால் இப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

    இந்நிலையில் ராஜுமுருகன் அடுத்ததாக நடிகர் சசிக்குமார் நடிப்பில் 'மை லார்ட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை சைத்ரா நடித்துள்ளார்.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலிவுட இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப் இன்று வெளியிட்டார். அதில் சசிகுமாரும் சைத்ராவும் பீடி பிடிக்கும் புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அடுத்ததாக சித்தார்த்தின் 40-வது திரைப்படத்தை தயாரித்துள்ளது.
    • இப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படம் இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கவுள்ளார்.

    கடந்த ஆண்டு மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது மாவீரன் திரைப்படம். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து மாபெரும் வெற்றியடைந்தது.

    இதனைத் தொடர்ந்து சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அடுத்ததாக சித்தார்த்தின் 40-வது திரைப்படமான சித்தார்த் 40 திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர். இப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படம் இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கவுள்ளார்.

    இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் யார் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் சரத் குமார், தேவையாணி, மீதா ரகுநாத், சைத்ரா அசார் போன்ற பிரபல நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.


    தேவையாணி மற்றும் சரத்குமார் 1990- களில் பல வெற்றிபடங்களான சூர்ய வம்சம், த்ன்காசி பட்டணம் மற்றும் பாட்டாளி போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர் தற்கு அடுத்து இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் ஜெனித்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சைத்ரா'.
    • இப்படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

    பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஜெனித்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சைத்ரா'. மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.


    மேலும், இந்த படத்தில் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கும் இப்படத்திற்கு சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 24 மணிநேரத்தில் நடக்கும் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து  வருகிறது.


    'சைத்ரா' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    ×