என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "My Lord"

    • மை லார்ட் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது.
    • மை லார்ட் படத்தில் சைத்ரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார். கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "டூரிஸ்ட் ஃபேமிலி" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாறியது.

    இந்த வரிசையில், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் "மை லார்ட்" திரைப்படம் நேற்று (பிப். 13) வெளியானது. இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சைத்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது.

    இந்நிலையில், 'MY LORD' படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதை ஒட்டி அப்படத்தின் விநியோகஸ்தரான நடிகர் சூர்யா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    நாயகன் சசிகுமார் தனது மனைவியுடன் கோவில்பட்டியில் வாழ்ந்து வருகிறார். மத்திய மந்திரியாக இருக்கும் ஆஷா சரத் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து அவருக்கு உடனடியாக மாற்று சிறுநீரக சிகிச்சை தேவைப்படுகிறது. அவருடைய ரத்தவகை மிகவும் அரிய வகை என்பதால் நீண்ட தேடலுக்கு பிறகு சிறுநீரக தானத்திற்கு 2 பேரை தேர்வு செய்கிறார்கள். அதில் ஒருவர் சசிகுமார்.

    ஆஷா சரத்தின் உடல்நிலை வெளியுலகிற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என அறுவை சிகிச்சையை ரகசியமாக நடத்த திட்டமிட்டு சசிகுமாரை அழைத்து வர முயற்சியில் ஆஷா சரத் குழு முயற்சி செய்கிறது. அதே சமயம் கோவில்பட்டியில் பல பிரச்சனைகளுடன் போராடி வரும் சசிகுமார் சிறுநீரகம் கொடுக்க மறுப்பு தெரிவிக்கிறார்.

    இறுதியில் சசிகுமார் சிறுநீரகம் கொடுத்தாரா? சசிகுமாருக்கு இருக்கும் பிரச்சனை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சசிகுமார் அறிமுக காட்சியிலேயே கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் பிணவறையில் இருந்து உயிருடன் வெளியே வந்து நடனம் ஆடும் காட்சி சிறப்பு.

    மனைவி சைத்ராவுடன் பாசம், அரசாங்கம் மீது கோபம், மற்றவர்கள் மீது இருக்கும் மனிதநேயம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். மனைவியாக வரும் சைத்ரா, பீடி பிடிப்பது, சாமியாடுவது சசிகுமாருடன் மருத்துவமனைக்கு அலைவது என நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

    ஆஷா சரத்தின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். இறக்க போகிறோம் என்ற பயத்தையும், அரசியல்வாதி என்ற திமிரையும், அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். பத்திரிகையாளராக குரு சோமசுந்தரம், நீதிபதியாக ஜெயபிரகாஷ், வழக்கறிஞராக கோபி நயினார் ஆகியோர் நடிப்பு கூடுதல் பலம்.

    இயக்கம்

    ஆட்சியும் அதிகாரமும் இருந்தால் எதுவென்றாலும் செய்ய முடியும். சாதாரண மனிதனின் வாழ்க்கையை எப்படி வேண்டும் என்றாலும் மாற்ற முடியும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன்.

    சாதாரண மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி, செல்வந்தர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். சாதாரண மனிதனின் வாழ்க்கை, அரசியல் அதிகாரம் இரண்டையும் இணைத்து திரைக்கதையை அமைத்து இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். முதல்பாதியில் மெதுவாக செல்லும் திரைக்கதை பலவீனம்.

    இசை

    ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    நீரவ்ஷா ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

    ரேட்டிங்-3/5

    • திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது.
    • அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார். கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "டூரிஸ்ட் ஃபேமிலி" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாறியது.

    இந்த வரிசையில், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் "மை லார்ட்" திரைப்படம் இன்று (பிப். 13) வெளியானது. இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சைத்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது.

    மை லார்ட் வெளியீட்டை ஒட்டி நடிகர் சசிகுமார், சைத்ரா ஆகியோர் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

    • குக்கூ, ஜோக்கர், ஜிப்சி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ராஜூமுருகன்.
    • ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அடுத்த திரைப்படம் "மை லார்ட்".

    செய்தியாளராக இருந்து இயக்குநராக உருவெடுத்தவர் ராஜூமுருகன். இவர் இயக்கத்தில் வெளியான குக்கூ, ஜோக்கர், ஜிப்சி, மாடர்ன் லவ் சென்னை (லாலகுண்டா பொம்மைகள்), ஜப்பான் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த வரிசையில், இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் "மை லார்ட்".

    ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள மை லார்ட் படத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் சைத்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் அதன் டிரெய்லர் வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

    இந்தத் திரைப்படம் வருகிற 13ஆம் தேதி வெளியாக உள்ளது. "மை லார்ட்" திரைப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த நிலையில், இயக்குநர் ராஜூ முருகன் அளித்த சமீபத்திய பேட்டியில், தான் இயக்கிய ஜப்பான் படம் குறித்து பேசியுள்ளார்.

    அப்போது அவர், "ஜப்பான் படத்திற்கு பிறகு என் சூழல் மிகவும் மோசமாக இருந்தது. ஆரம்பத்தில் அதை ஒரு இணையத் தொடராக உருவாக்கவே திட்டமிட்டே. கதை வடிவில் வித்தியாசமான யோசனைகள் இருந்தன. நடிகர் கார்த்தி படத்திற்குள் வந்தபோது, அவருக்காக நான் நிறைய விஷயங்களை மாற்றினேன். ஆம், அது என் பொறுப்பு தான். அந்த மாற்றங்களையெல்லாம் நானே செய்தேன், யாரிடமிருந்தும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால் செயல்படுத்தலில் நான் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக நடக்கவில்லை.

    இப்போதெல்லாம், ஜென் இசட் (Gen Z) சில வகையான படங்களை மட்டுமே ரசிப்பார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள். அது ஒரு கட்டுக்கதை தான். சமீபத்தில் வெளியான "சிறை" நன்றாக வேலை செய்தது, டூரிஸ்ட் ஃபேமிலி படமும் கூட வெற்றி பெற்றது. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் இயக்குநரும் ஜென் இசட் தான். எந்த வகையான திரைப்படமும் எந்த நேரத்திலும் ஓடலாம். ஜென் இசட் தலைமுறையினருக்காக மட்டுமே நாம் படங்களை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை," என்று தெரிவித்தார்.

    • பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாறியது.
    • மூன்று கதைகள் எழுதி முடிக்கப்பட்டு, தயார் நிலையில் இருக்கிறது.

    தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார். கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "டூரிஸ்ட் ஃபேமிலி" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாறியது.

    இந்த வரிசையில், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் "மை லார்ட்" திரைப்படம் நாளை மறுநாள் (பிப். 13) வெளியாகிறது. இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சைத்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    மை லார்ட் வெளியீட்டை ஒட்டி நடிகர் சசிகுமார் அளித்த சமீபத்திய பேட்டியில் அடுத்து தாான் இயக்கப் போகும் படங்கள் பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய சசிகுமார், "என்னிட்ம் மூன்று கதைகள் எழுதி முடிக்கப்பட்டு, தயார் நிலையில் இருக்கிறது. இந்தப் படங்களில் மற்ற ஹீரோக்கள் நடிப்பார்கள். இந்தப் படங்களில் நான் நடிக்க எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை.

    முதல் பட வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன, இதனால் தற்போது நான் வைத்திருக்கும் விருப்பப் பட்டியலில் கவனம் செலுத்த தயாராக இருக்கேன். இனி நான் படம் இயக்கவும் தயார். கவுதம் வாசுதேவ் மேனன் பலமுறை என்னிடம் கேட்டதால் தான் ENPT திரைப்படத்தில் நடித்தேன். தலைவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் "பேட்ட" படத்தில் நடித்தேன்.

    கிடாரி 2 படத்தின் ஐடியாவையும், அடிப்படை கதையையும் இயக்குநரிடம் பகிர்ந்துகொண்டேன். அவர் ஒரு முழுமையான கதையுடன் வருவதற்காக காத்திருக்கிறேன்," என்றார்.

    • மாரி செல்வராஜின் படங்கள் என்னையே வெட்கப்பட வைத்தது.
    • நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே இந்த படத்தின் அடிப்படையான நோக்கம்.

    ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' திரைப்படம் வரும் 13-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    பட வெளியீட்டை ஒட்டி இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதைதொடர்ந்து, பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது:-

    உண்மையிலேயே இது எனக்கு கொஞ்சம் நெகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. என்னைப் பற்றி இவ்வளவு அர்த்தமுள்ள, ஆழமான வார்த்தைகளை இங்கே பலர் பேசினார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

    நான் அசிஸ்டண்ட் டைரக்டராக இருந்த களத்தில் தினமும் பாலா சாரின் பிதாமகன் படத்தின் சிடியை 52 முறை வாங்கியிருக்கிறேன். எளிய மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் வலியையும், நேர்மையையும் சினிமாவாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அந்தப்படம் தந்தது அவர் வந்து வாழ்த்தியது பெருமை.

    மாரி செல்வராஜின் படங்கள் என்னையே வெட்கப்பட வைத்தது. அவர் மூலம் நான் கற்றுக்கொண்டேன் அவர் வாழ்த்தியதும் மகிழ்ச்சி. என் குருநாதர் லிங்குசாமி சார் என்னை கரம்பிடித்து சினிமாவில் அழைத்து சென்ற அவருக்கு என் நன்றிகள்.

    குரு சோமந்தரம், ஏ வெங்கடேஷ், ரவிக்குமார், ஞானவேல், யுகபாரதி என இங்கு வந்து வாழ்த்திய ஆளுமைகள் அனைவருக்கும் என் நன்றி.

    நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே இந்த படத்தின் அடிப்படையான நோக்கம். இந்த படம் எந்த கணக்குப் போடலிலும் உருவானது அல்ல. 'ராஜுமுருகன்' என்ற மனிதன் மீது 'அம்பேத்குமார்' என்ற மனிதன் வைத்த நம்பிக்கையில் தான் மை லார்ட் உருவானது," என்று அவர் கூறினார்.

    அம்பேத்குமார் என்ற மனிதர் இல்லையென்றால் இந்த படம் உருவாகியிருக்காது. நான் என் வாழ்க்கையில் மிகவும் டவுன் ஃபாலில் இருந்த ஒரு காலகட்டத்தில், என்னை அழைத்து 'வாழ்க்கை தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் சார், ஒரு நாள்கூட உட்காரக் கூடாது' என்று சொல்லி, அடுத்த நாளே படம் பண்ணத் தொடங்குவதற்கான மனநிலையை எனக்கு கொடுத்தவர் அவர். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

    இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் இயல்பாகவே வேண்டிக் கொள்வது, அந்த நம்பிக்கையை என்மீது வைத்த அம்பேத்குமார் என்ற மனிதனுக்காகத்தான். அவர் வைத்த நம்பிக்கை பொய்யாகக் கூடாது என்பதே என் மனதில் இருந்த ஒரே எண்ணம்.

    "இந்த படத்தை முதல் நாளிலிருந்து தன் தோளில் சுமந்து, எப்படியாவது இந்த சந்தையில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து என் கூடவே இருந்தவர் Think Music சந்தோஷ். படம் பார்த்த நாளிலிருந்து இன்று வரை இந்த படத்தைப் பற்றி பேசிக்கொண்டே, ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் இருந்தார். ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், சந்தோஷ் அந்த இடத்தில் இருந்தால் அது நிச்சயம் கிளியராகிவிடும். அவர் எப்போதும் எனக்கு 'ஆல்-டைம் டார்லிங்.

    இந்த படத்தில் நடித்த நடிகை சைத்ரா ஆரம்பத்தில் கால்ஷீட் தொடர்பான சில பிரச்சனைகள் இருந்தன. ஆனால் கதையை கேட்டவுடன், அனைத்தையும் தாண்டி உடனே வந்து நடித்து கொடுத்தார். அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    ஷான் ரோல்டனுக்கும் எனக்கும் உள்ள பிணைப்பு வெறும் இசை மட்டுமல்ல. அது இலக்கியம், அரசியல், சமூகம் என்று பல அடுக்குகளைக் கொண்ட ஆத்மார்த்தமான உறவு. அந்த எல்லாமே சேர்ந்து தான் அவரது இசையாக வெளிப்படுகிறது. இந்த படத்தில் அவர் இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறார்.

    சசிக்குமார் அண்ணன் இல்லையென்றால் இந்தப்படம் இல்லை, அவர் முழுப்படத்திற்கும் உறுதுணையாக இருந்தார். அன்பையும் நம்பிக்கையையும் பேச பணம் தேவைப்படுகிறது எப்படியாவது இப்படத்தில் பணத்தை சம்பாதித்து என் தயாரிப்பாளருக்கு தந்து விட வேண்டும். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சைத்ரா ஆச்சர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

    `சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அனைத்து தரப்பு மக்களும், திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டினர்.

    இதனைத் தொடர்ந்து சசிகுமார் தற்போது "ஜோக்கர், குக்கூ, ஜப்பான்" ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் 'மை லார்ட்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சைத்ரா ஆச்சர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

    ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், மை லார்ட் திரைப்படம் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு பிரத்யேக காட்சியாக திரையிடப்பட்டது. இதில் மை லார்ட் படத்தை பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுபற்றிய பேசிய அவர், "நேற்று இரவு நான் மை லார்ட் திரைப்படத்தை பார்த்தேன், அந்தப் படம் என்னை ஆழமாக பாதித்தது. அது என் மீது ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. இது ஒரு அர்த்தமுள்ள மற்றும் அழுத்தமான சமூக செய்தியை கொண்ட ஒரு சரியான வணிகத் திரைப்படம்."

    நந்தன், அயோத்தி மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்களை தொடர்ந்து, மை லார்ட் திரைப்படம் சசிகுமார் சார் அவர்களிடம் இருந்து நமது சமூகத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கும் மற்றொரு தரமான படமாக அமைந்துள்ளது.

    செய்தியாளராக இருந்து இயக்குநராக மாறியுள்ள ராஜூமுருகன், தொடர்ந்து முக்கியமான நிஜ வாழ்க்கை சிக்கல்களை முன்னிறுத்தி வருகிறார். அவர் எளிய கதாபாத்திரங்கள் மூலம் சொல்லப்படாத பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து, அவற்றை அர்த்தமுள்ள வெற்றிகளாக மாற்றுகிறார், அவருக்கு என் பாராட்டுகள்," என தெரிவித்தார்.

    • கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • நாட்டில் நடக்கும் சமூக அவலங்களை காண்பிக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது.

    சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரூரிஸ்ட் ஃபேமிலி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், சசிகுமார் படங்களிலையே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பெற்றது. மேலும் ஆஸ்கார் தகுதிப்பட்டியலிலும் இடம்பெற்றது.

    அதனைத்தொடர்ந்து தற்போது சசிகுமார் நடித்து முடித்துள்ள படம் 'மை லார்ட்'. இப்படத்தை ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கியுள்ளார். கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

    படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில், தற்போது ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி படம் வரும் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. நாட்டில் நடக்கும் சமூக அவலங்களை காண்பிக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது.

     

    படத்தை ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கி வருகிறார்.

    சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ரூரிஸ்ட் ஃபேமிலி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், சசிகுமார் படங்களிலையே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பெற்றது. தற்போது ஆஸ்கார் தகுதிப்பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

    இப்படத்தை தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மை லார்ட்'. இப்படத்தை ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கி வருகிறார்.

    கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் 'எச காத்தா' ராசாதி ராசா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

    இந்நிலையில் மை லார்டு படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியானது.  

    • டூரிஸ்ட் ஃபேமிலி ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
    • படத்தை ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கி வருகிறார்.

    சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ரூரிஸ்ட் ஃபேமிலி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், சசிகுமார் படங்களிலையே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பெற்றது. தற்போது ஆஸ்கார் தகுதிப்பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

    இப்படத்தை தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மை லார்ட்'. இப்படத்தை ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கி வருகிறார்.

    கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் 'எச காத்தா' ராசாதி ராசா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 


    • ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களின் இயக்குநர் ராஜ்மோகன் இயக்கியுள்ளார்.
    • பாடல் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

    சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ரூரிஸ்ட் ஃபேமிலி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், சசிகுமார் படங்களிலையே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மை லார்ட்'. இப்படத்தை ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கி வருகிறார். 

    இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இதில் கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் 'எச காத்தா' கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் ராசாதி ராசா இன்று வெளியாகி உள்ளது. இப்பாடல் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. யுவபாரதி வரிகளில் மகாலிங்கள், முத்துசிற்பி பாடியுள்ளனர். 



    • MY LORD படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
    • MY LORD படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அனைத்து தரப்பு மக்களும், திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டினர்.

    இதனை தொடர்ந்து சசிகுமார் தற்போது "ஜோக்கர், குக்கூ, ஜப்பான்" ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் 'மை லார்ட்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சைத்ரா ஆச்சர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், 'மை லார்ட்' படத்தின் முதல் பாடலான 'எச காத்தா' பாடல் வெளியாகியுள்ளது.இப்பாடலை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். இப்பாடலை சின்மயி, சத்யபிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர்.

    ×