சித்தார்த்தின் 40-வது படத்தில் இணையும் பிரபலங்கள்

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அடுத்ததாக சித்தார்த்தின் 40-வது திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படம் இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கவுள்ளார்.
சித்தார்த்தின் 40-வது படத்தில் இணையும் பிரபலங்கள்
Published on

கடந்த ஆண்டு மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது மாவீரன் திரைப்படம். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து மாபெரும் வெற்றியடைந்தது.

இதனைத் தொடர்ந்து சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அடுத்ததாக சித்தார்த்தின் 40-வது திரைப்படமான சித்தார்த் 40 திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர். இப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படம் இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் யார் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் சரத் குமார், தேவையாணி, மீதா ரகுநாத், சைத்ரா அசார் போன்ற பிரபல நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

தேவையாணி மற்றும் சரத்குமார் 1990- களில் பல வெற்றிபடங்களான சூர்ய வம்சம், த்ன்காசி பட்டணம் மற்றும் பாட்டாளி போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர் தற்கு அடுத்து இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com