மணம் முடித்தார் குட் நைட் நாயகி மீதா ரகுநாத்

கதாநாயகி மீதா ரகுனாத்துக்கும் நல்ல புகழும், பேரும் கிடைத்தது.மீதா ரகுநாத் மற்றும் அவரின் கணவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
மணம் முடித்தார் குட் நைட் நாயகி மீதா ரகுநாத்
Published on

தர்புகா சிவா இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'முதல் நீ முடிவும் நீ'. கிஷேன் தாஸ் மற்றும் மீதா ரகுநாத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். மீதா ரகுநாத் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 90-ஸ் கிட்ஸ் வாழ்க்கை, காதல், நட்பு உள்ளிட்டவைகளை சார்ந்து இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், ரமேஷ் திலக், மீதா ரகுநாத் நடிப்பில் 2023 ஆண்டு வெளியான படம் 'குட் நைட்'. குறட்டை விடுபவனின் வாழ்க்கையையும் அதனால் அவனுக்கு ஏற்படும் கஷ்டங்களை இப்படம் அழகாக வெளிக்காட்டி இருக்கும். இப்படம் வெளிவந்த போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கதாநாயகன் மணிகண்டனுக்கும், கதாநாயகி மீதா ரகுனாத்துக்கும் நல்ல புகழும், பேரும் கிடைத்தது.

அப்படத்தில் மீதா ரகுநாத் மிக சிறப்பாக நடித்து இருப்பார். அப்பாவி தனத்தையும், அழகையும் ஒரு சேர நடித்து இருப்பார். இந்நிலையில் நேற்று மீதா ரகுநாத் மணம் முடித்துக் கொண்டார். மீதா ரகுநாத் மற்றும் அவரின் கணவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். சமூக வலைதளங்களில் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com