search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Darbuka siva"

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • கதாநாயகி மீதா ரகுனாத்துக்கும் நல்ல புகழும், பேரும் கிடைத்தது.
  • மீதா ரகுநாத் மற்றும் அவரின் கணவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

  தர்புகா சிவா இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'முதல் நீ முடிவும் நீ'. கிஷேன் தாஸ் மற்றும் மீதா ரகுநாத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். மீதா ரகுநாத் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 90-ஸ் கிட்ஸ் வாழ்க்கை, காதல், நட்பு உள்ளிட்டவைகளை சார்ந்து இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருந்தது.

  இதைத் தொடர்ந்து விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், ரமேஷ் திலக், மீதா ரகுநாத் நடிப்பில் 2023 ஆண்டு வெளியான படம் 'குட் நைட்'. குறட்டை விடுபவனின் வாழ்க்கையையும் அதனால் அவனுக்கு ஏற்படும் கஷ்டங்களை இப்படம் அழகாக வெளிக்காட்டி இருக்கும். இப்படம் வெளிவந்த போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கதாநாயகன் மணிகண்டனுக்கும், கதாநாயகி மீதா ரகுனாத்துக்கும் நல்ல புகழும், பேரும் கிடைத்தது.

  அப்படத்தில் மீதா ரகுநாத் மிக சிறப்பாக நடித்து இருப்பார். அப்பாவி தனத்தையும், அழகையும் ஒரு சேர நடித்து இருப்பார். இந்நிலையில் நேற்று மீதா ரகுநாத் மணம் முடித்துக் கொண்டார். மீதா ரகுநாத் மற்றும் அவரின் கணவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். சமூக வலைதளங்களில் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • தர்புகா சிவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் முதல் நீ முடிவும் நீ.
  • இப்படத்தில் இடம்பெற்ற முதல் நீ முடிவும் நீ பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

  'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'கிடாரி', 'நிமிர்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவரும் நடிகருமான தர்புகா சிவா இயக்கி இசையமைத்த படம் முதலும் நீ முடிவும் நீ. இதில் கிஷன் தாஸ், அம்ரிதா மாண்டரின், பூர்வா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளைஞர்களின் உணர்வுகளையும், இன்றைய சிறுவர்களின் மன நிலையை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற முதல் நீ முடிவும் நீ பாடல் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது.


  முதல் நீ முடிவும் நீ

  முதல் நீ முடிவும் நீ

  இந்நிலையில் முதல் நீ முடிவும் நீ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தாமரை எழுத்தில் சித் ஸ்ரீராம், தர்புகா சிவா குரலில் வெளியான இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் மே மாதம் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush
  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.

  படத்தின் டிரைலர் தயாராகி இருக்கும் நிலையில், விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை வருகிற மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.  இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். 

  தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். #ENPT #Dhanush #MeghaAkash #Sasikumar GauthamMenon

  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush
  தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீசாக இருக்கிறது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்தது. படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக தயாரிப்பாளர் மதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்த படத்தில், தனுசுடன் மேகா ஆகாஷ், சசிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில், படக்குழு ஈடுபட்டு வருகிறது.


  படம் கோடை விடுமுறையில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.


  தனுஷ் தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். ராம்குமார், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அத்துடன் வரலாற்று படமொன்றையும் இயக்கி நடிக்கிறார். #ENPT #EnaiNokiPaayumThota #Dhanush #MeghaAkash

  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறுவதால், படம் கோடையில் ரிலீசாக வாய்ப்புள்ளது. #ENPT #Dhanush
  தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் ‘வட சென்னை,’ ‘மாரி-2’ படங்கள் திரைக்கு வந்தன. 2 படங்களையுமே ரசிகர்கள் கொண்டாடினார்கள். அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீசாக இருக்கிறது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

  கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்த படத்தில், தனுசுடன் மேகா ஆகாஷ், சசிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்தொகுப்பு, பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில், இயக்குநர் கவுதம் மேனன் இரவு-பகலாக ஈடுபட்டு இருக்கிறார்.  படம் கோடை விடுமுறையில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.

  தனுஷ் தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். ராம்குமார், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அத்துடன் வரலாற்று படமொன்றையும் இயக்கி நடிக்கிறார். #ENPT #EnaiNokiPaayumThota #Dhanush #MeghaAkash

  தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறியுள்ள இயக்குநர் கவுதம் மேனன், படத்தின் ரிலீஸ் அறிவிப்பையும் வெளியிட்டார். #ENPT #Dhanush
  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாகவும், படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் கவுதம் மேனன் நேற்று அறிவித்தார். படப்பிடிப்பின் கடைசி நாளான நேற்று படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய கவுதம் மேனன், இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

  `கடைசியாக எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு நிறைவு பெற்றது. நன்றி தனுஷ், எங்களுடன் இந்த பயணத்தில் இணைந்த சசிகுமாருக்கு மிக்க நன்றி. இனி தர்புகா சிவா, எடிட்டர் பிரவீன் படத்தை பார்த்துக் கொள்வார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

  இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சசிகுமார், தனுசுக்கு அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.  தர்புகா சிவா இசையமைக்கும் இந்த படத்தை கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து தயாரித்துள்ளனர். 

  அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்ஜிகே படங்கள் தீபாவளி ரேசில் இருந்து தள்ளிப்போனதால், விஜய்யின் சர்கார் படத்துடன் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா மோதவிருக்கிறது. #ENPT #Dhanush #SasiKumar #MeghaAakash

  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. #ENPT #Dhanush
  விக்ரமின் துருவ நட்சத்திரம், தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கவுதம் மேனன். 

  இதில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சில காரணங்களால் படம் முழுமையடையாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் சமரசமாகித் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ளதாக இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். இது குறித்து, “இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடு இரவில் மும்பையில் உள்ள உயரமான கூரையில் நடைபெற்றது. அழகிய மேகா, ‘டஃப்பி’ சசிகுமார் ஆகியோர் காட்சியுடன் படமாக்கப்பட்டது. இந்த படத்திற்கான உங்களது (சசிக்குமார்) பங்களிப்பை பாராட்டத்தான் வேண்டும்” என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். தனுஷ் அண்ணன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சசிகுமார் நடித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோ‌ஷன் பிக்சர்ஸ் பி.மதனுடன் இணைந்து கவுதம் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிடத் படக்குழு திட்டமிட்டுள்ளது. #ENPT #Dhanush #SasiKumar #MeghaAakash

  தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush
  தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'. கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகரும், இயக்குநருமான சசிகுமார் தனுசுக்கு அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

  படத்தின் 90 சதவீத காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், படத்தில் இருந்து விசிறி சூட் என்ற ஆடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 
  தர்புகா சிவா இசையில் விசிறி, நான் பிழைப்பேனோ என இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர். #ENPT #Dhanush

  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கிவிட்டதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். #ENPT #Dhanush #SasiKumar
  தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'. 

  கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகரும், இயக்குநருமான சசிகுமார் இந்த படத்தில் தனுசுக்கு அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

  படத்தின் 90 சதவீத காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்ட நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்பு நேற்று இரவு துவங்கியிருப்பதாக இயக்குநர் கவுதம் மேனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் தனுஷ் - சசிகுமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளனர். இந்த வாரத்திற்குள் மீதமுள்ள காட்சிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

  படத்தின் புதிய டைட்டில் லோகோ ஜூலை 20-ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து படம் விரைவில் திரைக்கு வரும் என்றும் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

  கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து வெளியாகிய இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #ENPT #Dhanush
  பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், அந்த படம் ஒரு உளவியல் டிராமா என்று ஷ்ரத்தா கூறியிருக்கிறார். #ShraddhaSrinath
  ஜம்மு காஷ்மீரில் பிறந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‘கோஹினூர்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அவருடைய இரண்டாவது படமான ‘யு டர்ன்’ என்ற கன்னடப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

  தமிழில் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர், கவுதம் கார்த்திக் ஜோடியாக ‘இவன் தந்திரன்’ படத்தில் நடித்தார். அதன்பிறகு வெளியான ‘விக்ரம் வேதா’ பெரிய ஹிட்டாக, மறுபடியும் மாதவன் ஜோடியாக ‘மாறா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

  அதுமட்டுமின்றி, இந்தி மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அருள்நிதி ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பரத் நீலகண்டன் இயக்கும் இந்தப் படத்துக்கு, தர்புகா சிவா இசையமைக்கிறார்.  எஸ்.பி. சினிமாஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. “முதலில் இந்தப் படத்தில் நடிக்க வைக்கும் திட்டம் எதுவும் படக்குழுவுக்கு இல்லை. திடீரென்று தான் அது நிகழ்ந்தது. கதையை விவரிப்பதற்காகப் பெங்களூரு வந்திருந்தார் பரத் நீலகண்டன். வழக்கமாக இரவில் நான் கதை கேட்க மாட்டேன். ஆனால், அவர் வந்துவிட்ட காரணத்தால் கேட்டேன்.

  இரவு 9 மணி முதல் 11 மணி வரை கதை சொன்னார். ஒவ்வொரு காட்சியையும் எந்த இடையூறும் இல்லாமல் அழகாகப் பிணைத்து அவர் வடிவமைத்திருந்ததைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படத்தை திரில்லர் வகையில் சேர்க்க முடியாது. உளவியல் டிராமா என்று கூறலாம்” என்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். #ShraddhaSrinath