என் மலர்

  சினிமா

  இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு
  X

  இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கிவிட்டதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். #ENPT #Dhanush #SasiKumar
  தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'. 

  கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகரும், இயக்குநருமான சசிகுமார் இந்த படத்தில் தனுசுக்கு அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

  படத்தின் 90 சதவீத காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்ட நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்பு நேற்று இரவு துவங்கியிருப்பதாக இயக்குநர் கவுதம் மேனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் தனுஷ் - சசிகுமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளனர். இந்த வாரத்திற்குள் மீதமுள்ள காட்சிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

  படத்தின் புதிய டைட்டில் லோகோ ஜூலை 20-ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து படம் விரைவில் திரைக்கு வரும் என்றும் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

  கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து வெளியாகிய இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #ENPT #Dhanush
  Next Story
  ×