search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Megha Akash"

    • சந்தானம் நடித்துள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'.
    • இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

    'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு சமீபத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது.


    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 'சாமி இல்லனு சொல்லிட்டு சுத்துன ராமசாமி தான நீ' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.



    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் மே மாதம் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush
    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.

    படத்தின் டிரைலர் தயாராகி இருக்கும் நிலையில், விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை வருகிற மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.



    இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். 

    தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். #ENPT #Dhanush #MeghaAkash #Sasikumar GauthamMenon

    நடிகை மேகா ஆகாஷ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவரை பார்த்தால் ஐ லவ் யூ சொல்லிவிடுவேன் என்று கூறியிருக்கிறார். #MeghaAkash
    கவுதம் மேனன் இயக்கத்தில், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். சில காரணங்களால் அப்படம் வெளிவராத நிலை உள்ளது. இதற்கிடையில் மேகாவுக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

    ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சிம்பு நடித்த வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்திலும் சமீபத்தில் திரைக்கு வந்த அதர்வாவின் பூமராங் படத்திலும் நடித்துள்ளார். தமிழில் நல்ல படங்களில் நடிக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்த அவரிடம் விஜய், அஜித், கிரிக்கெட் வீரர் டோனி ஆகியோரை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள் என்று கேட்டதற்கு ஜாலியாக பதில் அளித்தார். விஜய்யை பார்த்தால் எனக்கு டான்ஸ் சொல்லிக்கொடுங்கள் என்றும், அஜித்தை பார்த்தால் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்றும் கேட்பேன்.



    டோனியை நேரில் பார்த்தால் சட்டென ஐ லவ் யூ சொல்லிவிடுவேன். மேகா ஆகாஷின் பதிலை கண்டு விஜய், அஜித் ரசிகர்கள் பாராட்டினாலும், டோனி ரசிகர்கள் மேகாவை கிண்டல் செய்து வருகின்றனர். டோனிக்கு ஐ லவ் யூ கூறினாலும் அவர் ஏற்க மாட்டார். ஏற்கனவே அவருக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான மேகா ஆகாஷ் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் தொடர்ந்து தள்ளிப்போவதால், ஏமாற்றம் அடைந்ததாக கூறியுள்ளார். #MeghaAkash
    `ஒரு பக்க கதை' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அந்த படம் இன்னும் வெளிவரவில்லை. அடுத்து தனுசுடன் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடித்தார். அந்த படமும் தள்ளிப்போனது.

    இதனால் கவலையோடு இருந்த மேகா ஆகாசுக்கு `பேட்ட', `வந்தா ராஜாவாதான் வருவேன்' படங்கள் ரிலீசாகி ஆறுதல் கொடுத்தது. இதை பற்றி கூறும்போது ‘இந்த ஆண்டு தொடக்கத்திலேயே என்னோட படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு. இது ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கு.



    ஆனா, அதையும் தாண்டி ஒரு வருத்தமும் இருக்கு. அது என்னோட ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் இன்னும் ரிலீசாகமல் இருக்கிறது தான். இந்தப் படத்துல ரொம்ப அழகாக நடிச்சிருப்பேன். ஒவ்வொரு முறையும் இந்தப் படம் ரிலீஸ் ஆகிவிடும்னு நினைச்சு ஏமாந்து போகிறேன்’’ என்று கூறி உள்ளார். #MeghaAkash #ENPT #EnaiNokkiPaayumThotta

    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush
    தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீசாக இருக்கிறது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்தது. படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக தயாரிப்பாளர் மதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்த படத்தில், தனுசுடன் மேகா ஆகாஷ், சசிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில், படக்குழு ஈடுபட்டு வருகிறது.


    படம் கோடை விடுமுறையில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.


    தனுஷ் தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். ராம்குமார், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அத்துடன் வரலாற்று படமொன்றையும் இயக்கி நடிக்கிறார். #ENPT #EnaiNokiPaayumThota #Dhanush #MeghaAkash

    சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #VanthaRajavathaanVaruven #STR
    சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது.

    இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். பிரபு, கேத்தரீன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல்கள் இன்று வெளியாகிறது. லைகா புரொக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பிப்ரவரி 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #VanthaRajavathaanVaruven #STR #VRV#MeghaAkash #STRTheKing #SundarCBonanza #VRVHappyFamily #VRVFromFeb1st 

    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறுவதால், படம் கோடையில் ரிலீசாக வாய்ப்புள்ளது. #ENPT #Dhanush
    தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் ‘வட சென்னை,’ ‘மாரி-2’ படங்கள் திரைக்கு வந்தன. 2 படங்களையுமே ரசிகர்கள் கொண்டாடினார்கள். அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீசாக இருக்கிறது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்த படத்தில், தனுசுடன் மேகா ஆகாஷ், சசிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்தொகுப்பு, பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில், இயக்குநர் கவுதம் மேனன் இரவு-பகலாக ஈடுபட்டு இருக்கிறார்.



    படம் கோடை விடுமுறையில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.

    தனுஷ் தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். ராம்குமார், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அத்துடன் வரலாற்று படமொன்றையும் இயக்கி நடிக்கிறார். #ENPT #EnaiNokiPaayumThota #Dhanush #MeghaAkash

    `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் ரெட்கார்டு பாடல் மூலம். சினிமாவில் சிம்புவுக்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்ட சர்ச்சைக்கு சிம்பு பதில் அளித்துள்ளார். #VanthaRajavathaanVaruven #STR
    சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து இருக்கும் படம், ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இதில், சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். பிரபு, கேத்தரீன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், ரம்யாகிருஷ்ணன், ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். ரெட்கார்டு எனத் தொடங்கும் இந்த பாடலை அறிவு எழுத, சிம்பு பாடியுள்ளார்.



    ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில், சிம்புவுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட விவகாரத்தில், சிம்புவுக்கு நடிக்க ‘ரெட் கார்டு’ (தடை) போடப்படும் எனத் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதில் அளிக்கும் விதமாக, இந்த பாடலின் வரிகள் எழுதப்பட்டு இருப்பது, சிம்பு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. #VanthaRajavathaanVaruven #STR #VRV #RedCardu #MeghaAkash

    சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் முன்னோட்டம். #VanthaRajavathaanVaruven #STR
    லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன்.

    சிம்பு நாயகனாகவும், மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், கேத்திரன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ், விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    இசை - ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவு - கோபி அமர்நாத், படத்தொகுப்பு - என்.பி.ஸ்ரீகாந்த், நடனம் - பிருந்தா, சதீஷ்,  கலை இயக்குநர் - குருராஜ், தயாரிப்பாளர் - சுபாஷ்கரன், தயாரிப்பு நிறுவனம் - லைகா புரொடக்‌ஷன்ஸ், கதை - திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ், திரைக்கதை, இயக்கம் - சுந்தர்.சி.

    தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து மெகாஹிட்டான ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.

    படம் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #VanthaRajavathaanVaruven #VRV #STR 

    வந்தா ராஜாவாதான் வருவேன் டீசர்:

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - சிம்ரன் - திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தின் விமர்சனம். #Petta #PettaParaak #Rajinikanth #Rajinified
    ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார் பாபி சிம்ஹா. கல்லூரியையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அராத்து பண்ணுகிறார். இந்த கல்லூரியில் தான் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் படிக்கிறார்கள். இந்த நிலையில், அந்த கல்லூரிக்கு வார்டனாக வரும் ரஜினிகாந்த், பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அடக்கி, கல்லூரியையே மிரள வைக்கிறார். 

    இவ்வாறாக பேட்ட ரஜினியின் ஆட்டம் ஆரம்பமாக, ரஜினி மீது கோபமாக இருக்கும் பாபி, சந்தர்ப்பம் வரும் போது ரஜினியை பழிவாங்க எண்ணுகிறார். இதற்கிடையே நவாசுதீன் சித்திக்கின் ஆட்கள் சனத் ரெட்டியை கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து ரஜினி, சனத் ரெட்டியை காப்பாற்றுகிறார்.



    இவ்வாறாக தனது பேட்டயை விட்டுவிட்டு, வார்டனாக வரும் ரஜினி, சனத் ரெட்டியை காப்பாற்றினாரா? ரஜினி ஏன் வார்டனாக வந்தார்? அவரது முன்கதை என்ன? சனத் ரெட்டி யார்? நவாசுதீன் சித்திக் ஏன் சனத்தை கொல்ல நினைக்கிறார்? அதன் பின்னணியில் என்ன? நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    சூப்பர் ஸ்டார் என்பது வெறும் வார்த்தை இல்லை என்பதை காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார் ரஜினி. பயமறியா சிங்கமாக, படத்தில் எந்த இடத்தில், எந்த நேரத்திற்கு, என்ன வேண்டுமோ அதை மட்டும் கொடுத்து ரசிக்க வைத்துச் செல்கிறார். பழைய ரஜினியை பார்க்க ஆசைப்படுவோருக்கு இந்த படம் ஒரு மெகா விருந்து என்று தான் சொல்ல வேண்டும். கிராமத்து கெட்-அப், இளமையான தோற்றம் என மாஸ் காட்டிச் செல்கிறார்.



    நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி இருவருமே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். ரஜினியின் நண்பனாக சசிகுமார் மதுரைக்காரராக சிறப்பாக நடித்துள்ளார். சிம்ரன், திரிஷா ரஜினி ஜோடியாக முதல்முறை திரையில் தோன்றினாலும், இருவருமே ரஜினிக்கு சிறந்த ஜோடிதான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். அதிலும் சிம்ரன் கொஞ்சும் பேச்சில் ரசிகர்களின் இதங்களை கொள்ளை அடிக்கிறார். மாளவிகா மோகனனுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம். படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்.

    கல்லூரியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் காட்சி, ரஜினியிடம் அடங்கும் காட்சி என பாபி சிம்ஹா சிறப்பாக நடித்துள்ளார். மேகா ஆகாஷ் அழகாக வந்து செல்கிறார். கதையின் ஓட்டத்திற்கு சனத் ரெட்டி முக்கிய காரணமாக வருகிறார். முனிஸ்காந்த், நரேன், ராமசந்திரன் உள்ளிட்ட மற்ற அனைத்து கதாபாத்திரங்களுமே கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார்கள்.



    தான் ஒரு ரஜினி ரசிகர் என்பதை கார்த்திக் சுப்புராஜ் அப்பட்டமாக நிரூபித்திருக்கிறார். ரசிகர்கள் ரஜினியை எப்படி எல்லாம் பார்க்க எண்ணினார்களோ அப்படியே திரையில் காட்டியிருக்கும் கார்த்திக் சுப்புராஜூக்கு பாராட்டுக்கள். தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை கார்த்திக் சுப்புராஜ் நிரூபித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எடுத்திருக்கிறார். ரஜினியின் ஆட்டம், பேச்சு, நடை, உடை, ஸ்டைல், வசனம், சிரிப்பு என அனைத்திலும் முழு ரஜினியிசத்தை உணர வைக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையுமே சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். எனினும் படத்தின் நீளத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். சிறப்பான முயற்சி.



    அனிருத் இசையில் பாடல்கள் வேற லெவல். பின்னணி இசையின் மூலம் ரஜினியிசத்தை உணர வைக்கிறார். திருவின் ஒளிப்பதிவு அபாரம். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார்.

    மொத்தத்தில் `பேட்ட' சூப்பர்ஸ்டார் படம். #Petta #PettaReview #Rajinikanth #PettaFromToday #PettaParaak #Rajinified #PettaFDFS #Simran #Trisha #Sasikumar #VijaySethupathi #NawazuddinSiddiqui

    சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #VanthaRajavathaanVaruven #STR
    `செக்கச்சிவந்த வானம்' படத்திற்கு பிறகு சிம்பு அடுத்ததாக சுந்தர்.சி. இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், கேத்திரன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பிப்ரவரி 3-ஆம் தேதி சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே படத்தை பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து மெகாஹிட்டான ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #VanthaRajavathaanVaruven #VRV #STR 

    2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்கள் ரிலீசாகவிருக்கும் நிலையில், சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பொங்கல் ரிலீசில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. #STR #VanthaRajavathanVaruven
    பொங்கல் வெளியீடாக ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வெளியாக இருக்கின்றன. பேட்ட படத்துக்கு இசை வெளியீடு முடிந்து விளம்பரப் பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால், ‘விஸ்வாசம்’ தொடர்பாக இதுவரை பாடலோ, டீசரோ வெளியிடப்படவில்லை. இந்த வாரம் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஆனால், பொங்கலுக்கு வருவதாகச் சொன்ன சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் முடியவில்லை. அத்துடன் ரஜினி, அஜித் படங்கள் வெளியாவதால் திரையரங்குகளும் போதிய அளவில் கிடைக்காது என்பதால், பொங்கல் போட்டியில் இருந்து இந்தப் படம் விலகி இருக்கிறது. 

    சுந்தர்.சி இயக்கிவரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம், பவன் கல்யாண் நடித்த ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக். சிம்பு ஜோடியாக கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். 



    இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டபோது ‘பொங்கல் வெளியீடு’ என குறிப்பிட்டார்கள். ஆனால் ‘பேட்ட’ படத்தின் பொங்கல் வெளியீடு அறிவிப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட டீசரில் விரைவில் வெளியீடு என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் பொங்கல் வெளியீட்டிலிருந்து ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ விலகி உள்ளது உறுதியாகி இருக்கிறது. #STR #VanthaRajavathanVaruven

    ×