என் மலர்
சினிமா

மேகா ஆகாசின் சந்தோஷமும், வருத்தமும்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான மேகா ஆகாஷ் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் தொடர்ந்து தள்ளிப்போவதால், ஏமாற்றம் அடைந்ததாக கூறியுள்ளார். #MeghaAkash
`ஒரு பக்க கதை' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அந்த படம் இன்னும் வெளிவரவில்லை. அடுத்து தனுசுடன் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடித்தார். அந்த படமும் தள்ளிப்போனது.
இதனால் கவலையோடு இருந்த மேகா ஆகாசுக்கு `பேட்ட', `வந்தா ராஜாவாதான் வருவேன்' படங்கள் ரிலீசாகி ஆறுதல் கொடுத்தது. இதை பற்றி கூறும்போது ‘இந்த ஆண்டு தொடக்கத்திலேயே என்னோட படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு. இது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ஆனா, அதையும் தாண்டி ஒரு வருத்தமும் இருக்கு. அது என்னோட ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் இன்னும் ரிலீசாகமல் இருக்கிறது தான். இந்தப் படத்துல ரொம்ப அழகாக நடிச்சிருப்பேன். ஒவ்வொரு முறையும் இந்தப் படம் ரிலீஸ் ஆகிவிடும்னு நினைச்சு ஏமாந்து போகிறேன்’’ என்று கூறி உள்ளார். #MeghaAkash #ENPT #EnaiNokkiPaayumThotta
Next Story






