என் மலர்

  நீங்கள் தேடியது "Enai Nokki Paayum Thotta"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் மே மாதம் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush
  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.

  படத்தின் டிரைலர் தயாராகி இருக்கும் நிலையில், விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை வருகிற மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.  இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். 

  தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். #ENPT #Dhanush #MeghaAkash #Sasikumar GauthamMenon

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான மேகா ஆகாஷ் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் தொடர்ந்து தள்ளிப்போவதால், ஏமாற்றம் அடைந்ததாக கூறியுள்ளார். #MeghaAkash
  `ஒரு பக்க கதை' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அந்த படம் இன்னும் வெளிவரவில்லை. அடுத்து தனுசுடன் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடித்தார். அந்த படமும் தள்ளிப்போனது.

  இதனால் கவலையோடு இருந்த மேகா ஆகாசுக்கு `பேட்ட', `வந்தா ராஜாவாதான் வருவேன்' படங்கள் ரிலீசாகி ஆறுதல் கொடுத்தது. இதை பற்றி கூறும்போது ‘இந்த ஆண்டு தொடக்கத்திலேயே என்னோட படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு. இது ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கு.  ஆனா, அதையும் தாண்டி ஒரு வருத்தமும் இருக்கு. அது என்னோட ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் இன்னும் ரிலீசாகமல் இருக்கிறது தான். இந்தப் படத்துல ரொம்ப அழகாக நடிச்சிருப்பேன். ஒவ்வொரு முறையும் இந்தப் படம் ரிலீஸ் ஆகிவிடும்னு நினைச்சு ஏமாந்து போகிறேன்’’ என்று கூறி உள்ளார். #MeghaAkash #ENPT #EnaiNokkiPaayumThotta

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush
  தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீசாக இருக்கிறது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்தது. படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக தயாரிப்பாளர் மதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்த படத்தில், தனுசுடன் மேகா ஆகாஷ், சசிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில், படக்குழு ஈடுபட்டு வருகிறது.


  படம் கோடை விடுமுறையில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.


  தனுஷ் தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். ராம்குமார், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அத்துடன் வரலாற்று படமொன்றையும் இயக்கி நடிக்கிறார். #ENPT #EnaiNokiPaayumThota #Dhanush #MeghaAkash

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறுவதால், படம் கோடையில் ரிலீசாக வாய்ப்புள்ளது. #ENPT #Dhanush
  தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் ‘வட சென்னை,’ ‘மாரி-2’ படங்கள் திரைக்கு வந்தன. 2 படங்களையுமே ரசிகர்கள் கொண்டாடினார்கள். அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீசாக இருக்கிறது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

  கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்த படத்தில், தனுசுடன் மேகா ஆகாஷ், சசிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்தொகுப்பு, பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில், இயக்குநர் கவுதம் மேனன் இரவு-பகலாக ஈடுபட்டு இருக்கிறார்.  படம் கோடை விடுமுறையில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.

  தனுஷ் தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். ராம்குமார், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அத்துடன் வரலாற்று படமொன்றையும் இயக்கி நடிக்கிறார். #ENPT #EnaiNokiPaayumThota #Dhanush #MeghaAkash

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய்யின் சர்கார், விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் உள்ளிட்ட 6 படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில படங்களின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. #Sarkar #ThimiruPudichavan
  இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித், விஜய், சூர்யாவின் படங்கள் ரிலீசாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு தாமதமானதால் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூர்யாவின் என்ஜிகே உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. 

  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியிருக்கும் நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா, விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படங்களும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ள பில்லா பாண்டி படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், அட்டகத்தி தினேஷ் - அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படமும் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  அமீர் கான் - அமித்தாப் பச்சன் இணைந்து நடித்துள்ள தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படமும் தீபாவளி ரேசில் இணைந்துள்ளது.  3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்த தமிழ்நாட்டில் இப்போது 1000 திரையரங்குகள் கூட இல்லை. எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய படங்கள் வெளியானால் சிக்கல் ஏற்படுகிறது. ஆறு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக வாய்ப்பு இல்லை. எனவே திரையரங்குகள் கிடைக்காமல் சிறிய படங்கள் தள்ளிப் போக வாய்ப்புள்ளது. #Sarkar #ThimiruPudichavan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறியுள்ள இயக்குநர் கவுதம் மேனன், படத்தின் ரிலீஸ் அறிவிப்பையும் வெளியிட்டார். #ENPT #Dhanush
  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாகவும், படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் கவுதம் மேனன் நேற்று அறிவித்தார். படப்பிடிப்பின் கடைசி நாளான நேற்று படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய கவுதம் மேனன், இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

  `கடைசியாக எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு நிறைவு பெற்றது. நன்றி தனுஷ், எங்களுடன் இந்த பயணத்தில் இணைந்த சசிகுமாருக்கு மிக்க நன்றி. இனி தர்புகா சிவா, எடிட்டர் பிரவீன் படத்தை பார்த்துக் கொள்வார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

  இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சசிகுமார், தனுசுக்கு அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.  தர்புகா சிவா இசையமைக்கும் இந்த படத்தை கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து தயாரித்துள்ளனர். 

  அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்ஜிகே படங்கள் தீபாவளி ரேசில் இருந்து தள்ளிப்போனதால், விஜய்யின் சர்கார் படத்துடன் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா மோதவிருக்கிறது. #ENPT #Dhanush #SasiKumar #MeghaAakash

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. #ENPT #Dhanush
  விக்ரமின் துருவ நட்சத்திரம், தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கவுதம் மேனன். 

  இதில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சில காரணங்களால் படம் முழுமையடையாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் சமரசமாகித் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ளதாக இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். இது குறித்து, “இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடு இரவில் மும்பையில் உள்ள உயரமான கூரையில் நடைபெற்றது. அழகிய மேகா, ‘டஃப்பி’ சசிகுமார் ஆகியோர் காட்சியுடன் படமாக்கப்பட்டது. இந்த படத்திற்கான உங்களது (சசிக்குமார்) பங்களிப்பை பாராட்டத்தான் வேண்டும்” என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். தனுஷ் அண்ணன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சசிகுமார் நடித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோ‌ஷன் பிக்சர்ஸ் பி.மதனுடன் இணைந்து கவுதம் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிடத் படக்குழு திட்டமிட்டுள்ளது. #ENPT #Dhanush #SasiKumar #MeghaAakash

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருவதால், இருவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதி வருகின்றனர். #Dhanush #Sivakarthikeyan
  சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் டீஸர், பாடல்கள் வெளியீடு குறித்த அறிவிப்பை கடந்த இருபதாம் தேதி மாலை ஏழு மணிக்கு வெளியிட்டனர். அடுத்த அரை மணிநேரத்தில் தனுசின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய லோகோ வெளியீடு குறித்த அறிவிப்பு வந்தது. 

  அதனைத் தொடர்ந்து இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் மோதல் தொடங்கியது. டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இரு நடிகர்களின் ரசிகர்களும் பல்வேறு ஹேஷ்டேக்குகளுடன் நீயா நானா போட்டியை ஆரம்பித்தனர். அது இன்னும் முடியவில்லை. கெளதம் அதனை விசிறி விட்டிருக்கிறார். சீமராஜா படத்தின் வாரேன் வாரேன் சீமராஜா பாடலை நேற்று வெளியிட்டார்கள். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதனை டுவிட்டரில் டிரெண்டாக்கினார்கள். இந்நிலையில் ஏற்கனவே, வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் விசிறி பாடலின் இன்னொரு வடிவத்தை நாளை வெளியிடுவதாக கெளதம் அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் சுறுசுறுப்படைந்துள்ளனர். 

  முன்பு நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே போஸ்டர் யுத்தம் நடக்கும். படம் வெளியாகும் போது எந்த நடிகரின் கட்அவுட் உயரமானது என்ற போட்டி எழும். இப்போது அது டுவிட்டர் யுத்தமாக மாறியிருக்கிறது. #Dhanush #Sivakarthikeyan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush
  தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'. கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகரும், இயக்குநருமான சசிகுமார் தனுசுக்கு அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

  படத்தின் 90 சதவீத காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், படத்தில் இருந்து விசிறி சூட் என்ற ஆடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 
  தர்புகா சிவா இசையில் விசிறி, நான் பிழைப்பேனோ என இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர். #ENPT #Dhanush

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கிவிட்டதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். #ENPT #Dhanush #SasiKumar
  தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'. 

  கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகரும், இயக்குநருமான சசிகுமார் இந்த படத்தில் தனுசுக்கு அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

  படத்தின் 90 சதவீத காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்ட நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்பு நேற்று இரவு துவங்கியிருப்பதாக இயக்குநர் கவுதம் மேனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் தனுஷ் - சசிகுமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளனர். இந்த வாரத்திற்குள் மீதமுள்ள காட்சிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

  படத்தின் புதிய டைட்டில் லோகோ ஜூலை 20-ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து படம் விரைவில் திரைக்கு வரும் என்றும் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

  கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து வெளியாகிய இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #ENPT #Dhanush
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடிகர் சசிகுமார் தனுஷுக்கு அண்ணனாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush #SasiKumar
  தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'. 

  கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் சசிகுமாருடன் நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் கவுதம் மேனன், சசிகுமார் இருவரும் அதனை உறுதிப்படுத்தினர். 

  இந்த நிலையில், படத்தில் தனுசுக்கு அண்ணனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து விரைவில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சசிகுமார் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமான சுப்பிரமணியபுரம் படம் வெளியாகி நேற்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைந்தது.  அதனை ஒட்டி இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் பாராட்டி டுவிட்டரில் எழுத நேற்று சுப்ரமணியபுரம் படத்தின் 10-வது ஆண்டு விழா சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ரசிகர்களுக்கு நன்றி கூறி இருக்கும் சசிகுமார், அடுத்த ஆண்டு மீண்டும் இயக்குனராக தன்னை பார்க்கலாம் என்று உறுதி அளித்து இருக்கிறார். சுப்பிரமணியபுரத்தின் பார்ட் 2 வருமா? என்ற கேள்விக்கு வாய்ப்பே இல்லை. ஒரு சுப்பிரமணியபுரம் தான் என்றும் கூறி உள்ளார். #ENPT #Dhanush #SasiKumar

  ×