ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்துப் பெற்ற மேகா ஆகாஷ், சாய் விஷ்ணு தம்பதி!

கடைசியாக இவரது நடிப்பில், 'சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன்' உள்ளிட்ட படங்கள் வெளியாகி வெற்றிப்பெற்றது.முன்னாள் எம்.பி திருநாவுக்கரசரின் 2-வது மகனான சாய் விஷ்ணுவுடன் நடிகை மேகா ஆகாஷ்க்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.
ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்துப் பெற்ற மேகா ஆகாஷ், சாய் விஷ்ணு தம்பதி!
Published on

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மேகா ஆகாஷ் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, தனுஷுடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', சிம்புவுடன் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

கடைசியாக இவரது நடிப்பில், 'சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன்' உள்ளிட்ட படங்கள் வெளியாகி வெற்றிப்பெற்றது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசரின் 2-வது மகனான சாய் விஷ்ணுவுடன் நடிகை மேகா ஆகாஷ்க்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து மேகா ஆகாஷ், சாய் விஷ்ணு தம்பதி வாழ்த்தி பெற்றனர். அப்போது எடுத்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com