சாமி இல்லனு சொன்ன ராமசாமிதான நீ- ட்ரெண்டாகும் சந்தானம் பட டிரைலர்

சந்தானம் நடித்துள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'.இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
சாமி இல்லனு சொன்ன ராமசாமிதான நீ- ட்ரெண்டாகும் சந்தானம் பட டிரைலர்
Published on

'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு சமீபத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 'சாமி இல்லனு சொல்லிட்டு சுத்துன ராமசாமி தான நீ' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com