என் மலர்

  நீங்கள் தேடியது "Barath Neelakantan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி தமிழரசு - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் `கே 13' படத்தின் முன்னோட்டம். #K13 #Arulnidhi #ShraddhaSrinath
  எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர், சாந்த ப்ரியா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `கே 13'.

  அருள்நிதி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் காயத்ரி, யோகி பாபு, ரமேஷ் திலக், எருமைசாணி விஜய், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  ஒளிப்பதிவு - அரவிந்த் சிங், இசை - சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு - ரூபன், ஒலி வடிவமைப்பு - டி.உதயகுமார், கலை - கமலநாதன், சண்டைப்பயிற்சி - சுதேஷ், நடனம் - அசார், ஆடை வடிவமைப்பு - பிரியங்கா, பிருத்விராஜன் சந்தோஷ், நிர்வாக தயாரிப்பு - சிவக்குமார்.எம்.கே., இணை தயாரிப்பு - கிஷோர் சம்பத் & தீஷாஸ்ரீ, தயாரிப்பு - எஸ்.பி.ஷங்கர் & சாந்த ப்ரியா, எழுத்து, இயக்கம் - பரத் நீலகண்டன்.  படம் பற்றி நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசும் போது,

  கே 13 என்பது கே பிளாக்கில் 13-ஆம் நம்பர் வீடு. ஆனால் அந்த வீட்டில் என்ன ஸ்பெஷல் என்பது தான் படத்தின் கதை. இது வெறும் அப்பார்ட்மண்ட் பெயர் அல்ல, கதாபாத்திரமாக பிரதிபலிக்கும். இந்த படத்தில் மலர்விழி என்ற கதாபாத்திரத்தில் ஒரு எழுத்தாளராக நடித்திருக்கிறேன். அருள்நிதி கதை உருவாக்குபவராக, படம் இயக்கும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். இது சாதாரணமாக நாம் பார்த்த திரில்லர் படம் போல் இல்லாமல் வித்தியாசமானதாக இருக்கும். படத்தின் டிரைலர் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக அனைவரையும் கவரும்படியாக, ரசிகர்களை யோசிக்க வைக்கும் விதமாக இருப்பது சிறப்பு என்றார்.

  படம் வருகிற மே 3-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #K13 #Arulnidhi #ShraddhaSrinath

  கே 13 படத்தின் டீசர்:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியிருக்கும் `கே 13' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #K13 #Arulnidhi
  அருள்நிதி நடிப்பில் `புகழேந்தி எனும் நான்', `கே 13' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. இதில் `கே 13' படத்தை பரத் நீலகண்டன் இயக்குகிறார். அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன், யோகி பாபு, ரமேஷ் திலக், எருமைசாணி விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

  த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

  சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா இந்த படத்தை தயாரித்துள்ளனர். #K13 #Arulnidhi #ShraddhaSrinath

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் த்ரில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #K13 #Arulnidhi
  அருள்நிதி நடிப்பில் `புகழேந்தி எனும் நான்', `கே 13' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. இதில் `கே 13' படத்தை பரத் நீலகண்டன் இயக்குகிறார். அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். யோகி பாபு, ரமேஷ் திலக், எருமைசாணி விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

  த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் பரத் கூறுகையில், "ஆதிக் மிகவும் ஜாலியான மனிதர், ஆனால் அதற்கு நேர்மாறாக, இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க நேர்ந்தது. எனினும், அவர் மிகச்சிறப்பாக நடித்துக் கொடுத்தார். படத்தில் அவரது பகுதி பார்வையாளர்களை பெரிதும் கவனிக்க வைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

  சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றனர். #K13 #Arulnidhi #ShraddhaSrinath #AdhikRavichandran

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படத்திற்கு தலைப்பு வைத்து பர்ஸ்ட்லுக் வெளியிட்டிருக்கிறார்கள். #K13
  அருள்நிதி தற்போது பரத் நீலகண்டன் இயக்கத்தில் நடித்துள்ளார். இதில் அருள்நிதிக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘கே 13’ (K13) என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.

  இப்படத்தின் தலைப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி இயக்குனர் பரத் கூறும்போது, ‘K13 ஒரு வீட்டின் முகவரி, அது இந்த படத்தின் கதையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பை உடையது. சில வரம்புகளுக்கு உட்பட்டு, படத்தை பற்றி நாங்கள் இப்போது எதுவும் சொல்ல முடியாது. பார்வையாளர்களே படத்தை பார்த்து அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறோம்" என்றார். 

  K13 ஒரு இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்து பார்க்கும் வகையிலான ஒரு திரில்லர் படமாக இருக்கும். நாயகன், நாயகி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களும் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அவர்களை இதில் நடிக்க தேர்ந்தெடுத்ததற்கான காரணம், அவர்கள் இருவருமே சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். மேலும் தங்கள் படம் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும், உடனடியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க அவசரம் காட்டாதவர்கள். நல்ல கதைக்காக எவ்வளவு காலமும் காத்திருப்பவர்கள்" என்றார்.   இந்த K13 படத்தை எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்தா பிரியா தயாரிக்கிறார்கள். கிஷோர் சம்பத் மற்றும் டெஸாஸ்ரீ டி இணை தயாரிப்பு. தர்புகா சிவா இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், அந்த படம் ஒரு உளவியல் டிராமா என்று ஷ்ரத்தா கூறியிருக்கிறார். #ShraddhaSrinath
  ஜம்மு காஷ்மீரில் பிறந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‘கோஹினூர்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அவருடைய இரண்டாவது படமான ‘யு டர்ன்’ என்ற கன்னடப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

  தமிழில் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர், கவுதம் கார்த்திக் ஜோடியாக ‘இவன் தந்திரன்’ படத்தில் நடித்தார். அதன்பிறகு வெளியான ‘விக்ரம் வேதா’ பெரிய ஹிட்டாக, மறுபடியும் மாதவன் ஜோடியாக ‘மாறா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

  அதுமட்டுமின்றி, இந்தி மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அருள்நிதி ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பரத் நீலகண்டன் இயக்கும் இந்தப் படத்துக்கு, தர்புகா சிவா இசையமைக்கிறார்.  எஸ்.பி. சினிமாஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. “முதலில் இந்தப் படத்தில் நடிக்க வைக்கும் திட்டம் எதுவும் படக்குழுவுக்கு இல்லை. திடீரென்று தான் அது நிகழ்ந்தது. கதையை விவரிப்பதற்காகப் பெங்களூரு வந்திருந்தார் பரத் நீலகண்டன். வழக்கமாக இரவில் நான் கதை கேட்க மாட்டேன். ஆனால், அவர் வந்துவிட்ட காரணத்தால் கேட்டேன்.

  இரவு 9 மணி முதல் 11 மணி வரை கதை சொன்னார். ஒவ்வொரு காட்சியையும் எந்த இடையூறும் இல்லாமல் அழகாகப் பிணைத்து அவர் வடிவமைத்திருந்ததைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படத்தை திரில்லர் வகையில் சேர்க்க முடியாது. உளவியல் டிராமா என்று கூறலாம்” என்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். #ShraddhaSrinath

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `புகழேந்தி எனும் நான்' படத்தை தொடர்ந்து பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Arulnidhi
  அருள்நிதி நடிப்பில் கடைசியாக வெளியான `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொர்ந்து அருள்நிதி, தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் `புகழேந்தி எனும் நான்' படத்தில் நடித்து வருகிறார். சமகால அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். 

  இந்த நிலையில் பரத் நீலகண்டன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமானார். இந்த படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில், அருள்நிதி ஜோடியாக இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளர். விக்ரம் வேதா, ரிச்சி படங்களுக்கு பிறகு கன்னடம் மற்றும் இந்தி படங்களில் பிசியாக இருந்த ஷ்ரத்தா, அருள்நிதி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறார். இதுதவிர மாதவன் ஜோடியாக மாறா என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.
  எஸ்.பி.சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அருள்நிதியின் 12-வது படமாக உருவாகும் இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. #Arulnidhi

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `புகழேந்தி எனும் நான்' படத்தை தொடர்ந்து பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் நான்காவது முறையாக இணையவிருக்கிறார். #Arulnidhi
  அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `இரவுக்கு ஆயிரம் கண்கள்'. இரவில் நடக்கும் மர்மங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருந்த இந்த படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அருள்நிதி, தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் `புகழேந்தி எனும் நான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமகால அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். 

  இந்த படத்தை முடித்த பிறகு அருள்நிதி அடுத்ததாக பரத் நீலகண்டன் என்ற புதுமுக இயக்குநருடன் இணையவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. எஸ்.பி.சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க இருக்கிறார். 
  இந்த நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னதாக அருள்நதியுடன் டிமான்டி காலனி, ஆராது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  அருள்நிதியின் 12-வது படமாக உருவாகும் இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. #Arulnidhi

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரு.பழனியப்பன் இயக்கத்தில் `புகழேந்தி எனும் நான்' படத்தில் நடித்து வரும் அருள்நிதி, அடுத்ததாக பரத் நீலகண்டன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #Arulnidhi
  அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `இரவுக்கு ஆயிரம் கண்கள்'. இரவில் நடக்கும் மர்மங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருந்த இந்த படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 

  அருள்நிதி, தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் `புகழேந்தி எனும் நான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமகால அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். 

  இந்த நிலையில், அருள்நிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி அருள்நிதி அடுத்ததாக பரத் நீலகண்டன் என்ற புதுமுக இயக்குநருடன் கைகோர்த்திருக்கிறார். இந்த படத்தை எஸ்.பி.சினிமாஸ் தயாரிக்கிறது.   அருள்நிதியின் 12-வது படமாக உருவாகும் இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஜூலையில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Arulnidhi

  ×