என் மலர்
நீங்கள் தேடியது "மணிகண்டன்"
- பல்டி படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
- விஜய் சேதுபதி கூட்டத்தில் ஒருவனாக இருந்து படிப்படியாக உயர்ந்தார்.
ஷேன் நிகாம், செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பல்டி. இப்படத்தில் ஷேன் நிகாமுக்கு ஜோடியாக ப்ரீதி நடிக்கிறார்.
இப்படத்தை அறுமுக இயக்குனர் உன்னி சிவலிங்கம் இயக்குகிறார். இப்படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் 26ம் தேதி வெளியாகிறது.
இந்த படம் குறித்து சாந்தனு நேர்காணல் அளித்தார். அந்த நேர்காணலில் பேசிய அவர், "நான் எப்போதும் சாந்தனுவாக தான் இருக்கிறேன். சாந்தனு பாக்யராஜாக அல்ல. எனது அப்பாவால் தான் எனக்கு சக்கரக்கட்டி பட வாய்ப்பு கிடைத்தது. அப்படம் சரியாக போகாததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் எனக்கு வரவில்லை. இதனையடுத்து எனது அப்பாவால் சித்து படம் கிடைத்தது. அடுத்த சில வருடங்களில் எதோ தவறு நடப்பதாக உணர்ந்தேன், ஆனால் அதற்குள் என்னுடைய மார்க்கெட் போய்விட்டது.
அப்போது தான் சினிமா துறையில் யார் எல்லாம் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்க்க ஆரம்பித்தேன். விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், மணிகண்டன் அவர்களை கவனிக்க ஆரம்பித்தேன். விஜய் சேதுபதி கூட்டத்தில் ஒருவனாக இருப்பார். பின்னர் படிப்படியாக அடிமட்டத்தில் இருந்து உயர்ந்தார்.
ஆனால் நானோ அடிமட்டத்தில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை. பின்னர் இவர்களை பார்த்து நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். மக்களோடு தொடர்புபடுத்தக்கூடிய சாமானிய மனிதனின் கதாபாத்திரங்களை தேர்வு செய்ய ஆரம்பித்தேன். அப்படி தான் தங்கம், ப்ளூ ஸ்டார் படங்களில் நடித்தேன். இப்போது பல்டி என்கிற படத்திலும் நடித்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
- விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் தலைவன் தலைவி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- விஜய் சேதுபதி அடுத்ததாக முத்து என்கிற காட்டான் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் தலைவன் தலைவி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்க நித்யா மேனன் மற்றும் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதி அடுத்ததாக முத்து என்கிற காட்டான் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடரை மணிகண்டன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் காக்கா முட்டை மற்றும் கடைசி விவாசாயி போன்ற மாபெரும் படைப்பை உருவாக்கிய இயக்குநர் ஆவார். இத்தொடரை விஜய் சேதுபதி தயாரித்துள்ளார்.
இத்தொடரில் விஜய் சேதுபதி மற்றும் ஜாக்கி ஷெராப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடர் விரைவில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
- மணிகண்டன் கதாநாயகனாக நடித்த குட் நைட், லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் ஆகிய மூன்று திரைப்படங்களும் மெகா ஹிட் திரைப்படமாக உருவானது.
- சிம்புவின் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.
நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடித்த குட் நைட், லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் ஆகிய மூன்று திரைப்படங்களும் மெகா ஹிட் திரைப்படமாக உருவானது. அடுத்ததாக மணிகண்டன் வெற்றி மாறன் இயக்கும் சிம்புவின் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.
இந்நிலையில் மேலும் மணிகண்டன் கதாநாயகனாக மக்கள் காவலன் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரான சந்தோஷ் குமார் இயக்குகிறார். படத்தை பா.ரஞ்சித் தயாரிக்கிறார். இப்படம் ஒரு சாதி ரீதியாக நடக்கும் அரசியலை மையப்படுத்தி உருவாக இருக்கிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
- இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
சிம்பு அடுத்ததாக STR 49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் அறிவிப்பு வீடியோ படப்பிடிப்பு சமீபத்தில் நடைப்பெற்றது. இதற்காக சிம்பு புது கெட்டப்பில் காணப்படுகிறார். இப்படத்தின் கதைக்களம் வட சென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படம் எடுப்பதற்கு தனுஷ் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்ததாக சமீபத்தில் தகவல் வெளிவந்து அது உண்மையில்லை என மறுத்து வெற்றிமாறன் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
இந்நிலையில் இப்படத்தில் சிம்பு இரண்டு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். ஒன்று இளமை மற்றும் சிறிய முதுமை தோற்றத்திலும் நடிக்கிறார். படத்தில் குட் நைட் புகழ் மணிகண்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிகண்டன் நடிக்கும் கதாப்பாத்திரம் இப்படத்திலும் வட சென்னை 2 படத்திலும் இடம் பெறும் கதாப்பாத்திரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
- சமீபத்தில் தக் லைஃப் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
- சிம்புவின் 50-வது திரைப்படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க போவதாக படக்குழு அறிவித்தது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிலம்பரசன்.சமீபத்தில் தக் லைஃப் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் சிம்பு தற்பொழுது வெற்றி மாறன் இயக்கும் வட சென்னை பின்னணியில் உள்ள ஒரு படத்தில் நடித்து வருகிறார். சிம்புவின் 50-வது திரைப்படத்தை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்க போவதாக படக்குழு அறிவித்தது.
தற்பொழுது சிம்பு வெற்றி மாறன் திரைப்படத்தில் நடித்து வருவதால். தேசிங் பெரியசாமி அடுத்து மணிகண்டனை வைத்து ஒரு சிறிய பட்ஜெட்டில் திரைப்படத்தை இயக்குவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 50-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். மணிகண்டன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதற்குள் சிம்பு வெற்றி மாறன் மற்றும் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- குடும்பஸ்தன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
- குடும்பஸ்தன் திரைப்படம் 25 கோடி ரூபாய் வசூலித்தது.
இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள 'குடும்பஸ்தன்' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டுள்ளது. இத்திரைப்படம் பிப்ரவரி 28 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
'குடும்பஸ்தன்' படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் உள்பட பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இத்திரைப்படம் 25 கோடி ரூபாய் வசூலித்தது. இந்நிலையில், திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற குடும்பஸ்தன் திரைப்படம் 75வது நாளை கடந்ததை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி.
- இவர் தற்போது இந்தியில் 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்தியில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், 'விடுதலை', 'மும்பைக்கார்' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மெரி கிறிஸ்துமஸ்
இந்நிலையில், விஜய் சேதுபதி மலையாள நடிகர் மம்முட்டியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை 'காக்கா முட்டை', 'ஆண்டவன் கட்டளை', 'கடைசி விவசாயி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மம்முட்டி
மேலும், இப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இதில் தற்போது 15 நபர்கள் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர்.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 15 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6
இதில் இந்த வாரத்திற்கான டாஸ்க்கில் பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறியுள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து கேமரா முன்பு தங்களது புகார்களை தெரிவித்து யார் தங்களுக்காக வாதாட வேண்டும் என்பதை தேர்வு செய்துள்ளார். மேலும், இந்த வார நாமினேஷனில் மணிகண்டனை கடுமையான போட்டியாளர் என்று கூறி பலர் நாமினேஷன் செய்தனர்.

மணிகண்டன் ராஜேஷ்
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சகோதரர் மணிகண்டனுக்கு ஆதரவளிக்குமாறு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பிக்பாஸ் ரசிகர்கள் அவரால் மட்டுமே அவர் வெற்றி பெற வேண்டும் என்றும் மக்களை தன்னிச்சையாக முடிவெடுக்க விடுங்கள் என்றும் விமர்சித்து வருகின்றனர்.
Pls show ur support and love to my brother @Manikan97622480 🙏🙏🙏 pic.twitter.com/0nXjJvFJx2
— aishwarya rajesh (@aishu_dil) November 22, 2022
- இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘குட் நைட்’.
- இப்படத்தில் 'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'குட் நைட்'. இதில் 'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குனரும், நடிகருமான பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

குட்நைட் படக்குழு
ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர்.
'குட் நைட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் மணிகண்டனின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

குட் நைட் போஸ்டர்
படத்தைப் பற்றி இயக்குனர் பேசியதாவது, '' குறட்டையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவமும் இடம் பிடித்திருக்கிறது. தூங்கும் போது ஒருவர் விடும் குறட்டை, எப்படி மற்றவர்களை பாதிக்கிறது என்பதை நகைச்சுவையாகவும் அர்த்தமுள்ள கதையாகவும் உருவாக்கி இருக்கிறோம்'' என்றார் கூறினார்.
- இயக்குனர் மணிகண்டன் தற்போது புதிய வெப்தொடர் ஒன்றை இயக்குகிறார்.
- இதில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
'காக்கா முட்டை', 'ஆண்டவன் கட்டளை', 'கடைசி விவசாயி' போன்ற படங்கள் மூலம் ரசிகர் மத்தியில் இடம் பிடித்தவர் இயக்குனர் எம். மணிகண்டன். இவர் தற்போது புதிய வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார். இதில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

7c's என்டர்டெயின்மென்ட் சார்பாக பி. ஆறுமுக குமார் தயாரிக்கும் இந்த வெப் தொடருக்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு நேற்று மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியில் எளிமையான பூஜையுடன் துவங்கியது.
கடைசி விவசாயி படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி -மணிகண்டன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இந்த வெப்தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும், இந்த வெப்தொடர் நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் 'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘குட் நைட்’.
- இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'குட் நைட்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் பாடலை இசையமைப்பாளர் யுவன் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குட் நைட்'.
- இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'குட் நைட்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

குட்நைட்
ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

குட்நைட் போஸ்டர்
இந்நிலையில், 'குட் நைட்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'ஃபர்ஹானா' திரைப்படம் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.







