'குடும்பஸ்தன்' பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு- வைரலாகும் புகைப்படங்கள்

குடும்பஸ்தன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.குடும்பஸ்தன் திரைப்படம் 25 கோடி ரூபாய் வசூலித்தது.
'குடும்பஸ்தன்' பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு- வைரலாகும் புகைப்படங்கள்
Published on

இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள 'குடும்பஸ்தன்' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டுள்ளது. இத்திரைப்படம் பிப்ரவரி 28 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.

'குடும்பஸ்தன்' படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் உள்பட பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இத்திரைப்படம் 25 கோடி ரூபாய் வசூலித்தது. இந்நிலையில், திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற குடும்பஸ்தன் திரைப்படம் 75வது நாளை கடந்ததை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com