என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shanmugapandian"

    • ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் திரைப்படம் 'கொம்புசீவி'
    • படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கிறார்

    ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் 'கொம்புசீவி' படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்

    கேப்டன் என்று ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். முன்னணி நடிகராக திகழ்ந்த அவர், தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாளின் போதும் படக்குழுவினர் அனைவருக்கும் அறுசுவை உணவும், புது உடைகளும் வழங்குவதை வாடிக்கையாக கொண்டவர்.

    தற்போது, சின்ன கேப்டன் என்று அழைக்கும் விதத்தில் சிறப்பான செயல் ஒன்றை செய்துள்ளார் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். தான் நடிக்கும் 'கொம்புசீவி' படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள் மற்றும் பிரியாணி வழங்கி அவர் கௌரவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய சண்முகபாண்டியன், "இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு அனைவருக்கும் அள்ளி கொடுத்தவர் எனது தந்தையார். அவரது அடிச்சுவற்றை பின்பற்றி 'கொம்புசீவி' படம் உருவாக கடுமையாக உழைத்த குழுவினருக்கு என்னால் முடிந்த சிறிய அன்பளிப்பாக இன்று உணவையும், உடைகளையும் பகிர்ந்து கொண்டேன்," என்றார்.

     

    'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது அடுத்த படைப்பாக 'கொம்புசீவி' படத்தை உருவாக்கி வருகிறார்.

    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்திற்காக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் பொன்ராம் முதல் முறையாக கை கோர்த்துள்ளார்.

    கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த, நகைச்சுவையும் சண்டை காட்சிகளும் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் திருவிழாவாக உருவாகும் இப்படத்தை பெரும் பொருட்செலவில் புதிய நிறுவனமான ஸ்டார் சினிமாஸ் பேனரில் முகேஷ் டி. செல்லையா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கப்பட்டது சென்னையில் இன்று நிறைவுற்றது.

    புதுமுகம் தார்னிகா நாயகியாக நடிக்கிறார். சுஜித் ஷங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் படத்தொகுப்பை கையாள, கலை இயக்கத்தை சரவண அபிராம் கவனிக்க, ஃபீனிக்ஸ் பிரபு மற்றும் சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். 

    • அறிமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில் இளையராஜா இசையமைக்க முனிஷ் காந்த், யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா போன்ற பலர் நடித்துள்ளனர்.
    • அவரின் மகனான சண்முகப்பாண்டியன் படத்திற்கும் பெரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

    டிசம்பர் 28 2023 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மரணம் அடைந்தார். இன்று முன்னணி நட்சத்திரமாக இருக்கும் பல நடிகர்களுக்கு விதையிட்டவர் விஜயகாந்த்.

    பல முன்னணி நடிகர்கள் விஜயகாந்தின் இறுதி சடங்கில் கலந்து அவர்களின் துக்கத்தை பகிர்ந்து கொண்டார்கள். நடிகர் சங்கத்திற்காக பல நன்மைகளை செய்து இருக்கிறார் விஜயகாந்த். விஜயகாந்த் மகனான சண்முகப் பாண்டியன் 2015 ஆண்டு சுரேந்தரன் இயக்கத்தில் சகாப்தம் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகினார். பின் 2018 ஆம் ஆண்டு மதுர வீரன் என்ற படத்தில் நடித்தார்.

    இப்பொழுது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில் இளையராஜா இசையமைக்க முனிஷ் காந்த், யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா போன்ற பலர் நடித்துள்ளனர்.

    விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு ராகவா லாரன்ஸ் வீடியோ பதிவினை வெளியிட்டார் அதில் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவிற்கு எப்படி விஜயகாந்த் சிறப்பான பணிகளை மேற்கொண்டாரோ அதேப்போல் நாமளும் செய்ய வேண்டும். பலக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த விஜயகாந்தின் குடும்பத்திற்கு நாம் நம் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என் கூறினார்.

    மேலும் விஜயகாந்தின் படத்திற்கு எவ்வளவு ஆதரவு கொடுத்தோமோ அதேப் போல அவரின் மகனான சண்முகப்பாண்டியன் படத்திற்கும் பெரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக் கொண்டார். சண்முகப் பாண்டியன் படத்தில் வாய்ப்பு இருந்தால் நான் கவுரவ தோற்றத்தில் நடிப்பேன் என்றும் கூறினார்.

    அதேப் போல் இன்று படைத்தலைவன் படப்பிடிப்பிற்கு சென்று இருக்கிறார் ராகவா லாரன்ஸ். 3 நாள் படைத்தலைவன் படத்தில் நடிப்பதற்காக கால் ஷீட் கொடுத்து இருக்கிறார். எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் லாரன்ஸ் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.

    ராகவா லாரன்ஸ் மற்றும் சண்முகப் பாண்டியன் இருவரும் இணைந்து படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாளை படைத்தலைவன் படத்தின் அப்டேட் வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தப் படத்தை நடிகர் உபேந்திரா இயக்கியுள்ளார்.
    • பான் இந்தியா திரைப்படமாக Ui உருவாகி இருக்கிறது.

    'லஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி. & வீனஸ் என்டர்டெய்னர்ஸ் சார்பில் ஜி. மனோகரன் மற்றும் கே.பி. ஸ்ரீகாந்த் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் Ui. இந்தப் படத்தை நடிகர் உபேந்திரா இயக்கியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள Ui வருகிற டிசம்பர் 20 அன்று வெளியாகிறது.

    சமீபத்தில் இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சண்முகப்பாண்டியன், "உபேந்திரா சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அப்பாவும் அவரைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். 'Ui' படத்தின் டிரெய்லரும் வித்தியாசமாக உள்ளது."

     


    "ஹாலிவுட் தரத்தில் நம்மால் படம் எடுக்க முடியாதா அவர்கள் செய்வதை நம்மால் செய்ய முடியாதா என்ற கேள்வி எனக்கு எப்போதும் இருக்கும். அந்த ஏக்கத்தை இந்தப் படம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனை கன்னடப் படம் என்று மட்டும் பார்க்காமல் பான் இந்திய படமாகப் பார்த்து மக்கள் ஆதரவுக் கொடுக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×