என் மலர்
சினிமா செய்திகள்

ஹாலிவுட் தரத்தில் பான் இந்தியா திரைப்படம் Ui - நடிகர் சண்முக பாண்டியன்
- இந்தப் படத்தை நடிகர் உபேந்திரா இயக்கியுள்ளார்.
- பான் இந்தியா திரைப்படமாக Ui உருவாகி இருக்கிறது.
'லஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி. & வீனஸ் என்டர்டெய்னர்ஸ் சார்பில் ஜி. மனோகரன் மற்றும் கே.பி. ஸ்ரீகாந்த் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் Ui. இந்தப் படத்தை நடிகர் உபேந்திரா இயக்கியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள Ui வருகிற டிசம்பர் 20 அன்று வெளியாகிறது.
சமீபத்தில் இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சண்முகப்பாண்டியன், "உபேந்திரா சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அப்பாவும் அவரைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். 'Ui' படத்தின் டிரெய்லரும் வித்தியாசமாக உள்ளது."
"ஹாலிவுட் தரத்தில் நம்மால் படம் எடுக்க முடியாதா அவர்கள் செய்வதை நம்மால் செய்ய முடியாதா என்ற கேள்வி எனக்கு எப்போதும் இருக்கும். அந்த ஏக்கத்தை இந்தப் படம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனை கன்னடப் படம் என்று மட்டும் பார்க்காமல் பான் இந்திய படமாகப் பார்த்து மக்கள் ஆதரவுக் கொடுக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






