என் மலர்

  நீங்கள் தேடியது "Mithran"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.
  • 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

  இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து படக்குழு "உங்கள் ஆடர் தயாராகுகிறது, விரைவில் டெலிவரி செய்யப்படும்" என்று ஒரு போஸ்டரை வெளியிட்டது.

  திருசிற்றம் பலம்

  இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் நாளை (7-8-2022) மாலை 7மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

  'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக மித்ரன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை ஜோடியாக நடிக்க இருக்கிறார். #Karthi
  இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருவது உறுதி என விஷால் அறிவித்தார். இரண்டாம் பாகத்திற்கு முன்பு அந்த படத்தின் இயக்குனர் மித்ரன் கார்த்தியை கதாநாயகனாக்கி ஒரு படம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

  இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். நிவேதா பெத்துராஜ் ஒரு கதாநாயகியாக தேர்வாகி உள்ளார். சாயிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரில் ஒருவரை மற்றொரு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய படக்குழு முயற்சித்து வருகிறது. இந்தப் படத்தை தவிர நிவேதா இரண்டாவது முறையாகத் தெலுங்கில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். அவர் தெலுங்கில் அறிமுகமான ‘மென்டல் மதிலோ’ படத்தை இயக்கிய விவேக் அத்ரய்யாவே இந்தப் படத்தையும் இயக்குகிறார். ‘புரோசெவ ரெவருரா’ எனப் பெயரிடப் பட்டுள்ளது.  இவை தவிர எழில் இயக்கும் ஜகஜால கில்லாடி, விஜய் ஆண்டனி நடிக்கும் திமிரு புடிச்சவன், பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடித்துவரும் நிவேதா நடித்த பார்ட்டி படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான `இரும்புத்திரை' படத்தின் தெலுங்கு பதிப்பான `அபிமன்யுடு' படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படக்குழுவை பாராட்டியுள்ளார். #Irumbuthirai Vishal
  சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவாகி வருகிறது. சூர்யா, விஷால், கார்த்தி, விஜய் ஆண்டனி ஆகியோரது படங்கள் இரண்டு மொழிகளையும் குறி வைத்தே எடுக்கப்படுகின்றன. கடந்த மாதம் வெளியான விஷாலின் `இரும்புத்திரை' படத்திற்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்து. 

  அதேபோல `அபிமன்யுடு' என்ற பெயரில் தெலுங்கில் இந்த படம் வெளியானது. தெலுங்கு ரசிகர்களிடையேயும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தெலுங்கில் நேரடியாக வெளியான படங்களைவிட `அபிமன்யுடு' படத்திற்கு நல்ல வசூல் கிடைத்திருப்பதாக தெலுங்க வட்டாரத்தில் பேசப்படுகிறது.   இந்த நிலையில், `அபிமன்யுடு' படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகஷே் பாபு படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இதுகுறித்து மகேஷ் பாபு அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

  `அபிமன்யுடு படத்தை பார்த்து வியந்தேன். பி.எஸ்.மித்ரன் தனது நோக்கத்தை திரையில் அறிவுப்பூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். விஷால் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்' இவ்வாறு கூறியிருக்கிறார். 

  இந்த படத்தில் அர்ஜுன், சமந்தா, ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். #Irumbuthirai Vishal

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தின் தெலுங்கு பதிப்பான அபிமன்யடு படத்தின் வசூல் ரூ.10 கோடியை தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Irumbuthirai Vishal
  சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவாகி வருகிறது. சூர்யா, விஷால், கார்த்தி, விஜய் ஆண்டனி ஆகியோரது படங்கள் இரண்டு மொழிகளையும் குறி வைத்தே எடுக்கப்படுகின்றன. கடந்த மாதம் வெளியான விஷாலின் இரும்புத்திரை தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

  படத்தில் அர்ஜுன், சமந்தா, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்து இருந்தார்கள். அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற இரும்புத்திரை தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் கடந்த வாரம் வெளியானது.  இந்த படம் தெலுங்கில் நேரடியாக வெளியான படங்களைவிட வசூலில் முந்தி இதுவரை 12 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அபிமன்யுடு வெளியான திரையரங்குகளில் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருப்பதால் படம் அங்கும் பிளாக்பஸ்டர் வெற்றி அடையும் என நம்புகிறார்கள். எல்லா மொழிகளிலும் சேர்த்து மொத்தமாக இதுவரை 60 கோடியை வசூலித்துள்ளது இரும்புத்திரை. #Irumbuthirai Vishal
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் `இரும்புத்திரை' படத்தின் முன்னோட்டம். #Irumbuthirai #Vishal
  விஷால் பிலிம் பாக்ட்ரி சார்பில் விஷால் தயாரித்துள்ள படம் `இரும்புத்திரை'.

  பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நாயகனாகவும், சமந்தா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டெல்லி கணேஷ், கோபி, ரோபோ ஷங்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 

  ஒளிப்பதிவு - ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒலி வடிவமைப்பு - டபாஸ் நாயக், பாடல்கள் - கபர் வாசுகி, விக்னேஷ் சிவன், விவேக், கலை - உமேஷ் குமார், ஸ்டன்ட் - திலீப் சுப்பராயன், எடிட்டிங் - அந்தோணி எல்.ரூபன், தயாரிப்பு - விஷால், எழுத்து, இயக்கம் - பி.எஸ்.மித்ரன்.  சமூகத்தின் முக்கிய பிரச்னை ஒன்றை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கிறது. வருகிற மே 11-ஆம் தேதி (நாளை) ரிலீசாக இருக்கிறது. #Irumbuthirai #Vishal

  ×