இரும்புத்திரை படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தடுக்கின்றனர் - பி.டி.செல்வகுமார் புகார்

விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் இரும்புத்திரை படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் ஒரு கும்பல் தடுப்பதாக பி.டி.செல்வகுமார் குற்றம் சாட்டி போலீசில் மனு அளித்துள்ளார். #Irumbuthirai #Vishal
இரும்புத்திரை படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தடுக்கின்றனர் - பி.டி.செல்வகுமார் புகார்
Published on

விஷால் நடிப்பில் வருகிற 11-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் படம் `இரும்புத்திரை'. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருக்கிறார். 

சமூகத்தின் முக்கிய பிரச்னை ஒன்றை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தை விஷால் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்த இசையமைத்திருக்கிறார். 

கிரிக்ஸ் சினி கிரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மற்றும் `புலி' படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார், தமிழகம் முழுவதும் இந்த படத்தை வெளியிட இருக்கின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பி.டி.செல்வகுமார் பேசும் போது, 

`தமிழ்நாடு விநியோகஸ்தர் சங்கத்தின் அருள்பதி படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தடுக்கின்றனர். இதுகுறித்து போலீஸ் மற்றும் தமிழக முதல்வரிடம் மனு அளிக்க உள்ளேன். இரும்புத்திரை படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று திரையரங்குகளை அருள்பதி மிரட்டி வருகிறார்.

மேலும் விநியோகஸ்தர் கூட்டமைப்பு தயாரிப்பாளரிடம் இருந்து 5 சதவீதம் கமிஷன் பெறுவதற்காக இதை செய்வதாகவும், பணம் தரவில்லை என்றால் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று மிரட்டுவதாகவும் பி.டி.செல்வகுமார் கூறியுள்ளார். #Irumbuthirai #Vishal

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com