தனுஷ்
தனுஷ்

டெலிவரி எப்ப வரும்? அதிரடி அப்டேட் கொடுத்த தனுஷ் படக்குழு

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Published on

'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து படக்குழு "உங்கள் ஆடர் தயாராகுகிறது, விரைவில் டெலிவரி செய்யப்படும்" என்று ஒரு போஸ்டரை வெளியிட்டது.

திருசிற்றம் பலம்

இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் நாளை (7-8-2022) மாலை 7மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com