என் மலர்
நீங்கள் தேடியது "Samudra Gani"
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் ஒரு முக்கிய படைப்புடன் வருகிறார். "தடயம்" எனும் இந்த புதிய படைப்பு, விரைவில் ZEE5-ல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள "தடயம்", சமுத்திரகனியின் வலுவான நடிப்புத் திறனை மையமாகக் கொண்டு உருவான ஒரு தீவிரமான கதையம்சம் கொண்ட படைப்பாக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதற்கு முன்னதாக, சமுத்திரகனி இயக்கி நடித்த "விநோதய சித்தம்" திரைப்படம் ZEE5-ல் வெளியானபோது, விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, "தடயம்" திரைப்படமும் ZEE5 தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நினைவில் நிற்கும் அனுபவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.
கதையின் விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படாத நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் இப்படம் காவல்துறை பின்னணியில் ஒரு அழுத்தமான திரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் புதிய படம் "ஹிட் லிஸ்ட்".
- இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் புதிய படம் "ஹிட் லிஸ்ட்". கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சூர்ய கதிர் இயக்குகிறார். இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, பொன்ராம், மித்ரன் ஆர் ஜவஹர், கார்த்திக் சுப்பராஜ், சிறுத்தை சிவா, பேரரசு, கதிர், சரண், எழில், இராஜ குமாரன், சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின், ஆர்.வி. உதயகுமார், பி. வாசு ஆகியோர் கலந்து கொண்டனர். சமீபத்தில் படக்குழுவை நடிகர் விஜய் , சூர்யா உள்ளிட்டோர் பாராட்டினர்.
இந்நிலையில் படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது எகஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டிரைலர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஒரு சைக்கோ கொலைக்காரன் வித்தியாசமான முறையில் கதாநாயகனின் குடும்பத்தை கொலை செய்கிறான். அதை எப்படி கதாநாயகன் காப்பாற்றுகிறார் போன்ற காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






