என் மலர்
சினிமா செய்திகள்

மீண்டும் ஒரு வலுவான கதையுடன்.. ZEE5-ல் வெளியாகும் சமுத்திரகனியின் "தடயம்"
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் ஒரு முக்கிய படைப்புடன் வருகிறார். "தடயம்" எனும் இந்த புதிய படைப்பு, விரைவில் ZEE5-ல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள "தடயம்", சமுத்திரகனியின் வலுவான நடிப்புத் திறனை மையமாகக் கொண்டு உருவான ஒரு தீவிரமான கதையம்சம் கொண்ட படைப்பாக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதற்கு முன்னதாக, சமுத்திரகனி இயக்கி நடித்த "விநோதய சித்தம்" திரைப்படம் ZEE5-ல் வெளியானபோது, விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, "தடயம்" திரைப்படமும் ZEE5 தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நினைவில் நிற்கும் அனுபவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.
கதையின் விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படாத நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் இப்படம் காவல்துறை பின்னணியில் ஒரு அழுத்தமான திரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






