என் மலர்
சினிமா செய்திகள்

வைரல் வீடியோ:இளமையின் ரகசியம்... 71 வயதில் வொர்க் அவுட் செய்யும் சரத்குமார்
- மீண்டும் ஒரு முறை தனது பிட்னஸ் மீது உள்ள ஆர்வத்தை சரத்குமார் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
- Back Muscle வலுப்படுத்தும் வொர்க்அவுட் வீடியோவை பகிர்ந்து, இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்துள்ளார்.
தமிழ் சினிமாவின் நடிகர், முன்னாள் பாடி பில்டர் மற்றும் அரசியல்வாதியாக இருப்பவர் சரத்குமார். இவருக்கு 71 வயது ஆனாலும் தோற்றம் மற்றும் உடல்வாகு அப்படி காட்சியளிக்காது. இப்போதும் மிகவும் சுறுசுறுப்பாக பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு முறை தனது பிட்னஸ் மீது உள்ள ஆர்வத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது எக்ஸ் பக்கத்தில், Back Muscle வலுப்படுத்தும் வொர்க்அவுட் வீடியோவை பகிர்ந்து, இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்துள்ளார்.
1974-ஆம் ஆண்டு மிஸ்டர் மெட்ராஸ் யுனிவர்சிட்டி பட்டத்தை வென்ற முன்னாள் பாடி பில்டராக இருந்த சரத்குமார், ஆண்டுகள் கடந்தும் தனது உடல் கட்டமைப்பை பராமரித்து வரும் விதம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறது. சினிமாவில் அவர் நடித்த பல ஆக்ஷன் கதாபாத்திரங்களுக்கும் இந்த வலிமையான உடல் அமைப்பு பெரும் பங்காற்றியுள்ளது.
சரத்குமார் தனது பதிவில், "நாளையும் மற்றொரு வொர்க் அவுட் வீடியோவை பகிர்வேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், இனிமேலும் அவர் தனது ஜிம் பயிற்சிகளை அடிக்கடி பகிரப்போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த ஆண்டு சரத்குமார் ஏற்கனவே ஐந்து படங்களில் நடித்துள்ளார்:
நெசிப்பாயா (தமிழ்)
நிலவுக்கு என் மேலென்னடி கோபம் (தமிழ்)
3 BHK (தமிழ்)
அர்ஜுன் சன் ஆஃப் வைஜயந்தி (தெலுங்கு)
கண்ணப்பா (தெலுங்கு)
இப்போது அவர் நடித்துள்ள 'அடங்காதே'ஆகஸ்ட் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.






