என் மலர்
நீங்கள் தேடியது "ஆவணப்படம்"
- வாச்சாத்தி சம்பவம் குறித்து COMRADE TALKIES ஆவணப்படம் தயாரித்துள்ளது.
- வாச்சாத்தி வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள்என்று தீர்ப்பளிக்கப்பட்டது
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைக் கிராமத்தில், கடந்த 1992ம் ஆண்டு வனத்துறை, காவல் துறையினர் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் பாலியல் வன்முறை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்டிருந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள் என்று தருமபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இவர்களில் 126 பேர் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் காவல் துறையினர். மீதமுள்ள 5 பேர் வருவாய்த்துறை ஊழியர்கள் இதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. இவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை பெற்றவர்கள் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
COMRADE TALKIES தயாரித்துள்ள 'வாச்சாத்தி' ஆவணப் படத்தைப் பார்த்த பிறகு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேட்டி
இந்நிலையில், வாச்சாத்தி சம்பவம் குறித்து COMRADE TALKIES தயாரித்துள்ள 'வாச்சாத்தி' ஆவணப்படம் நேற்று திரையிடப்பட்டது. இந்த ஆவணப்பட திரையிடலில் கலந்து கொண்ட எம்.பி. கமல்ஹாசன், நீதியை நிலைநாட்டிட 30 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து போராடிய வாச்சாத்தி கிராம மக்களுடன் உரையாடினார்.
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பென்குயின் ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு பென்குயின் தனது கூட்டத்தை விட்டுப் பிரிந்து, உணவு கிடைக்கும் கடல் பகுதியை நோக்கிச் செல்லாமல், ஆளில்லாத பனி மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்கிறது.
இந்த வீடியோ 2007-ம் ஆண்டு பிரபல ஜெர்மானிய இயக்குனர் வெர்னர் ஹெர்சாக் எடுத்த "Encounters at the End of the World" என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகள் கழித்து இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஏன்?
பொதுவாக பென்குயின்கள் கூட்டமாகத் தான் வாழும். ஆனால், இந்த ஒரு பென்குயின் மட்டும் தனது திசையை மாற்றி, சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைகளை நோக்கி எதற்காகச் செல்கிறது? என்று யாருக்கும் தெரியவில்லை.
இது ஒரு அசாதாரணமான நடத்தை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நடத்தையை மனித வாழ்க்கையுடன் ஒப்பிட்டு தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தங்கள் சொந்த ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினர்.
அதாவது, கூட்டத்தோடு இல்லாமல், எதிர்காலம் புதிராக இருந்தாலும் தனக்கென ஒரு பாதையில் செல்லும் நபர்களோடு பென்குயினின் நடத்தையை ஒப்பிடுகின்றனர். மேலும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் இல்லாமல் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று புரியாத புதிராக இருப்பவர்களின் அடையாளமாகவும் அந்த பென்குயின் மாறியுள்ளது.
கூட்டத்தோடு இருந்தால் உணவு கிடைக்கும், ஆனால் ஒன்றுமே இல்லாத மலைகளை நோக்கி சென்றால் மரணமே மிஞ்சும் என்ற இயற்கையின் விதியை எதிர்த்து அந்த பென்குயின் நடைபோடுவதில் நிச்சயம் ஏதோ இருக்கிறது.
- ஆவணப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.
- சமீபத்தில் அஜித் "GENTLEMAN DRIVER OF THE YEAR 2025" விருது வாங்கினார்.
நடிப்பு, கார் ரேஸ், குடும்பம் என தன்னை ஒரு பிஸியான வாழ்க்கைக்குள்ளேயே வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படம் ரூ.300 கோடி வசூலித்தது. அதனைத்தொடர்ந்து கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய குழுமூலம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவை பெருமைப்படுத்தி வருகிறார். அதில் கொஞ்சம் இடைவெளி கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்தினருடனும் நேரம் செலவிட்டு வருகிறார். இந்நிலையில் அஜித்தின் இந்த கார் ரேஸிங் பயணம், ஆவணப்படமாக வெளிவர உள்ளது. இதனை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.
'Racing Isn't Acting' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அஜித் "GENTLEMAN DRIVER OF THE YEAR 2025" விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.






