என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பென்குயின்"

    பொதுவாக பென்குயின்கள் கூட்டமாகத் தான் வாழும்.

    சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பென்குயின் ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், ஒரு பென்குயின் தனது கூட்டத்தை விட்டுப் பிரிந்து, உணவு கிடைக்கும் கடல் பகுதியை நோக்கிச் செல்லாமல், ஆளில்லாத பனி மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்கிறது.

    இந்த வீடியோ 2007-ம் ஆண்டு பிரபல ஜெர்மானிய இயக்குனர் வெர்னர் ஹெர்சாக் எடுத்த "Encounters at the End of the World" என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகள் கழித்து இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

    ஏன்?

    பொதுவாக பென்குயின்கள் கூட்டமாகத் தான் வாழும். ஆனால், இந்த ஒரு பென்குயின் மட்டும் தனது திசையை மாற்றி, சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைகளை நோக்கி எதற்காகச் செல்கிறது? என்று யாருக்கும் தெரியவில்லை.

    இது ஒரு அசாதாரணமான நடத்தை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நடத்தையை மனித வாழ்க்கையுடன் ஒப்பிட்டு தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தங்கள் சொந்த ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினர்.

    அதாவது, கூட்டத்தோடு இல்லாமல், எதிர்காலம் புதிராக இருந்தாலும் தனக்கென ஒரு பாதையில் செல்லும் நபர்களோடு பென்குயினின் நடத்தையை ஒப்பிடுகின்றனர். மேலும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் இல்லாமல் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே  என்று புரியாத புதிராக இருப்பவர்களின் அடையாளமாகவும் அந்த பென்குயின் மாறியுள்ளது.

    கூட்டத்தோடு இருந்தால் உணவு கிடைக்கும், ஆனால் ஒன்றுமே இல்லாத மலைகளை நோக்கி சென்றால் மரணமே மிஞ்சும் என்ற இயற்கையின் விதியை எதிர்த்து அந்த பென்குயின் நடைபோடுவதில் நிச்சயம் ஏதோ இருக்கிறது. 

    சுதந்திர தினத்தன்று முதல்முறையாக இந்தியாவில் பிறந்த பென்குயின் சில நாட்களிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மும்பை :

    இந்தியாவில் வேறு எங்கும் பென்குயின்கள் இல்லாத நிலையில் மும்பையில் உள்ள பைகுலா விலங்கியல் பூங்காவிற்கு கடந்த 2016-ம் ஆண்டு தென்கொரியாவில் இருந்து ஹாம்போல்டு வகையைச் சேர்ந்த 8 பென்குயின்கள் கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு பென்குயின் பூங்காவிற்கு வந்த 3 மாதங்களில் இறந்து விட்டது.

    இதனால், விலங்குகள் நல அமைப்பு பென்குயின் வாழ ஏதுவான சூழல் இல்லாத இந்தியாவில் அவற்றை பராமரிக்க கூடாது என மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுக்கவில்லை.

    எனவே, மீதமுள்ள 7 பென்குயின்களை, பனிப்பிரதேசங்களில் இருப்பது போல் 16 -18 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் சுமார் 1,700 சதுர அடியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட இடத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன.

    இந்நிலையில், இதில் ஒரு பென்குயின் கடந்த 8-ம் தேதி முட்டைப்பொறித்தது, அந்த முட்டையில் இருந்து சுதந்திர தினத்தன்று ஒரு குஞ்சு பொறித்து வெளியே வந்தது.

    இந்தியாவில் பிறந்த முதல் பென்குயின் என்பதால் பூங்கா அதிகாரிகள் அதனை மிகவும் கவனமாக கவனித்து வந்தனர். ஆனால், அந்தப் பென்குயின் நேற்று உயிரிழந்ததாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ×